வேலூர் மாவட்டம் அடுத்த காட்பாடி வட்டத்திற்குட்பட்ட கரசமங்கலம் கொல்லைமேடு ஏரியில் கொள்ளை போகும் கனிம வளங்கள் மணல். கொள்ளை மாபியாக்கள் மீது காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கப்படுமா ...?
வேலூர் மாவட்ட காட்பாடி எல்லையான காமநாயக்கன் கரசமங்கலம் கிராமம் அடுத்துள்ளது கொல்லைமேடு கங்காநதி என்ற. இப்பகுதியில் ஏரி உள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இரவு பகலாக சட்டவிரோதமாக ஜே.சி.பி இயந்திரத்தை பயன்படுத்தி லட்சக்கணக்கான மதிப்பிலான மண் வெட்டி எடுத்து சட்ட விரோதமாக கடத்தப்பட்டு வருகிறது . தற்போது 2021 சட்டமன்ற பொதுத் தேர்தலை பயன்படுத்தி வேலூர் மாவட்ட எல்லை பகுதியில் ஏரிகளில் இருந்து இதுபோன்று மண் வெட்டி எடுக்கப்பட்டு லாரிகளில் பல்வேறு கிராமங்கள் வழியாக கடத்தப்பட்டு செங்கல் சூலைகளுக்கு ஒரு லாரியின் லோடு ரூபாய் 5000 இருந்து ரூபாய் 8000, வரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர் . மேலும் வேலூர் மாவட்ட எல்லையான கரசமங்கலம் கிராமம் கங்காநதி ஏரி நிலத்தில் இருந்து எந்தவித அனுமதியும் பெறாமல் ஓடக்கல் வெட்டப்பட்டு நூற்றுக்கணக்கான லாரிகளில் பல செங்கல் சூலைகளுக்கு கனிம வளங்கள் கடத்தப்படுவதாகவும் அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் இது போன்று கனிம வளங்கள் கொள்ளை போவதை தடுத்து நிறுத்தவேண்டிய வருவாய் துறை அதிகாரிகளுக்கு பலமுறை தகவல் அளித்தும் அப்பகுதி சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர் இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சித் தலைவரும் நீர்வள மன்மத கனிம வள அதிகாரிகள் அரசமங்கலம் கிராமம் கருணாநிதி ஏரியில் சட்டவிரோதமாக கணிமவளம் மணலை வெட்டி லாரியில் கடத்துபவர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொண்டு பிணையில் வராத அளவிற்கு அவர்கள் மீது குண்டாஸ் போட வேண்டும் என சமூக ஆர்வலர்களும் , பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஏரிகளில் ஆற்றில் மணல் கிடைத்தவர்கள் மீது பிணையில் வராத அளவிற்கு கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது