உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்க வேண்டும் : அரசுக்கு ஜனநாயக எழுச்சி கழக தலைவர் காயல் அப்பாஸ் கோரிக்கை !
உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்க வேண்டும் : அரசுக்கு காயல் அப்பாஸ் கோரிக்கை !

ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. 

கன்னியாகுமரி மாவட்டம் , குளச்சல் பகுதியை சேர்ந்த அலைக்சாண்டர்,ஹென்லின், தாசன் ஆகிய மூன்று பேர் கர்நாடக மாநிலம் மங்களூர் கடற்பகுதியில் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது சிங்கப்பூர் கப்பல் மோதி படகு சேதமடைந்த விபத்தில் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.என்ற செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது.

பரிதாபமாக உயிரிழந்துள்ள அலைக்சாண்டர்,ஹென்லின், தாசன், ஆகியோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் தெரிவித்து கொள்கிறோம்.

இது போன்ற கொர சம்பவங்கள் நடை பெறாமல் இருக்க தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லும் போது மிகவும் கவனமாகவும், பாதுகாப்பாகவும், செல்ல வேண்டும் என ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்துகிறது 

 எனவே உயிரிழந்துள்ள  மீனவர்களின் குடும்பத்திற்கு தமிழகஅரசு இழப்பிடு தலா ரூ 5 லட்சம் வழங்க வேண்டும் மேலும் இறந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை உடனடியாக வழங்க வேண்டும் எனஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் சார்பாக வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம் . இவ்வாறு அக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கூறியுள்ளார்
கருத்துகள்
Popular posts
தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
படம்
சமூக வலைத்தளங்களில் பல பெண்கள் குறி வைத்து வாழ்க்கையை சீரழித்த காமுகன் சென்னையில் கைது
படம்
பணியிடங்களில் நடக்கும் பாலியல் தொல்லைச் சம்பவங்களின் தாக்கம்...” ஐகோர்ட் நீதிபதி வேதனை!
படம்
அனைத்து தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி’’ - முதல்வர் ஸ்டாலின். தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை" என்று தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். தந்தையர் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை! தம் மக்கள் அவையத்து முந்தியிருக்க உழைக்கும் அனைத்துத் தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி நவில்வோம்!" என்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழக விளையாட்டுத்துறை மந்திரி உதயநிதி ஸ்டாலின் நடித்த கண்ணை நம்பாதே திரைப்பட வெளியீட்டு விழா கோலாகலம்!
படம்