லஞ்சம் வாங்கிய குடிசை மாற்று வாரிய அலுவலர்!

லஞ்சம் வாங்கிய குடிசை மாற்று வாரிய அலுவலர்! 

வீட்டு விற்பனை பத்திரம் வழங்க, 6,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய, தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய அலுவலருக்கு, இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, அண்ணாநகர் கிழக்கு, அன்னை சத்யா நகரில், புருஷோத்தமன் என்பவருக்கு, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் கட்டிய குடியிருப்பில் வீடு ஒதுக்கப்பட்டது.வீட்டுக்கான தவணை தொகையை செலுத்திய நிலையில், விற்பனை பத்திரத்தை வழங்குமாறு, டி.பி.சத்திரத்தில் உள்ள, தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய அலுவலகத்தில், பில் கலெக்டராக பணியாற்றி வந்த, பி.எஸ்.ரவி என்பவரிடம், 2009ல் புருஷோத்தமன் கேட்டு உள்ளார்.அதற்கு ரவி, லஞ்சமாக, 6,000 ரூபாய் கேட்டுள்ளார். இது குறித்து, லஞ்ச ஒழிப்பு போலீசில், புருஷோத்தமன் புகார் செய்தார். பின், போலீசார் அறிவுரைப்படி, புருஷோத்தமன், லஞ்ச பணத்தை கொடுத்த போது, ரவியை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை, சென்னையில் உள்ள, லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றத்தில், நீதிபதி ஓம்பிரகாஷ் முன் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, குடிசை மாற்று வாரிய அலுவலர் ரவி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், 2,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார்.

கருத்துகள்
Popular posts
தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
படம்
சமூக வலைத்தளங்களில் பல பெண்கள் குறி வைத்து வாழ்க்கையை சீரழித்த காமுகன் சென்னையில் கைது
படம்
பணியிடங்களில் நடக்கும் பாலியல் தொல்லைச் சம்பவங்களின் தாக்கம்...” ஐகோர்ட் நீதிபதி வேதனை!
படம்
அனைத்து தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி’’ - முதல்வர் ஸ்டாலின். தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை" என்று தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். தந்தையர் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை! தம் மக்கள் அவையத்து முந்தியிருக்க உழைக்கும் அனைத்துத் தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி நவில்வோம்!" என்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழக விளையாட்டுத்துறை மந்திரி உதயநிதி ஸ்டாலின் நடித்த கண்ணை நம்பாதே திரைப்பட வெளியீட்டு விழா கோலாகலம்!
படம்