லஞ்ச ஒழிப்புத்துறை தனது பாக்கெட்டில் இருப்பதாக நினைத்துக் கொண்டு திமிராக இருக்கும் ஆலங்காயம் ஸ்கீம் பி.டி.ஓ மணவாளன் ..!
லஞ்ச ஒழிப்புத்துறை தனது பாக்கெட்டில் இருப்பதாக நினைத்துக் கொண்டு திமிராக இருக்கும் ஆலங்காயம் ஸ்கீம்  பி.டி.ஓ மணவாளன் ..!

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஸ்கீம் பி.டிஓ வாக இருப்பவர் மணவாளன் இவரது அதிகாரத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் உள்ள ஒவ்வொரு ஊராட்சி செயலாளர்களும் மணவாளன் பி.டி.ஓ வாக வந்த பிறகு மிகவும் குஷியாகி விட்டார்களாம்  காரணம் செய்யாத வேலைக்கு எல்லாம் வேலைகள் செய்த மாதிரி பில் போட்டு பாஸ் செய்வதில் மிக வல்லமை படைத்தவர் பி.டி.ஓ மணவாளன் என கூறும் அலுவலக ஊழியர்கள் இந்த பிள்ளைகளுக்கு எல்லாம் உண்மை தன்மை அறிந்து விசாரித்து கையெழுத்து போட ஸ்கீம் பி.டி.ஓ மணவாளன், ஸ்கீம் டெப்டி பி.டி.ஒ ஸ்ரீதருக்கும் பர்சன்டேஜ் கொடுத்தால் போதும் ஊராட்சியில் நடக்காத வேலைகள் எல்லாம் நடந்த மாதிரி கையெழுத்து போட்டு விடுவாராம், இதுதவிர ஒவ்வொரு கிராமத்திலும் பிளான் அப்ரூவல் கேட்டு கட்டிய வீட்டுக்கும் வரி போட ஊராட்சி செயலர்கள். டெப்டி பி.டி.ஒ ஸ்ரீதர் மூலம் இடங்களுக்கு ஏற்றவாறு ஸ்கீம் பி.டி.ஒ மணவாளன் லஞ்சப் பணத்தை பெறுகிறாராம், இவரைப் பற்றி மற்ற பி.டி.ஓக்கள் பேசிக்கொள்வது என்னவென்றால் பி.டி.ஓ மணவாளன் யாரையும் மதிக்க மாட்டார் ஒரு சில ஊராட்சி செயலர்கள் தான் சொல்வதை மட்டும் தான் கேட்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தி நிர்பந்தம் செய்வார் அதுபோல் ஊராட்சி செயலர்கள் தனது வேதனையை எங்களிடம் ஆதங்கத்தையும் தெரிவித்துக் கொள்கின்றனர் என்ன செய்வது இப்படியும் சில பி.டி.ஓக்கள் எங்கள் துறையில் இருக்கிறார்கள்,  2021ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தல் தற்போது நடைபெற்று வாக்கு எண்ணிக்கை வருகின்ற மே மாதம் 2ம் தேதி கவுண்டிங் செய்யப்பட உள்ள நிலையில் பி.டி.ஓ மணவாளன் தேர்தல் பணி காரணமாக அமைதியாக  இருக்கிறாராம் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன் மீண்டும் மணவாளன் லஞ்ச வசூல் வேட்டையில் ஈடுபட்டு விடுவார் என்று வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழியர்கள் வட்டாரம் புலம்பித் தள்ளுகின்றனர். லஞ்ச ஒழிப்புத் துறை தனது பாக்கெட்டில் இருப்பதாக நினைத்துக்கொண்டு திமிராக செயல்படும் மணவாளன் பி.டிஓக்களை ஆலங்காயம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மாலை நேரத்தில் நோட்டமிட்டு திடீரென லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை செய்தால் லஞ்சத்தை வாரிக் குவிக்கும் பி.டி.ஓ மணவாளன் எலிக்கு பொறி வைத்து பிடிப்பது போல் சிக்கிக் கொள்வார் என அப்பகுதி பொதுமக்கள் கூறிக்கொள்கின்றனர், லஞ்ச ஒழிப்புத்துறை தனது கடமையை செய்யப்போவதாக என்பதை பொறுத்திருந்துதான் பார்ப்போம்..?

கருத்துகள்
Popular posts
தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
படம்
சமூக வலைத்தளங்களில் பல பெண்கள் குறி வைத்து வாழ்க்கையை சீரழித்த காமுகன் சென்னையில் கைது
படம்
பணியிடங்களில் நடக்கும் பாலியல் தொல்லைச் சம்பவங்களின் தாக்கம்...” ஐகோர்ட் நீதிபதி வேதனை!
படம்
அனைத்து தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி’’ - முதல்வர் ஸ்டாலின். தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை" என்று தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். தந்தையர் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை! தம் மக்கள் அவையத்து முந்தியிருக்க உழைக்கும் அனைத்துத் தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி நவில்வோம்!" என்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழக விளையாட்டுத்துறை மந்திரி உதயநிதி ஸ்டாலின் நடித்த கண்ணை நம்பாதே திரைப்பட வெளியீட்டு விழா கோலாகலம்!
படம்