காட்பாடியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது
  கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது வேளாண் விற்பனை துறை மற்றும் காட்பாடி வட்ட இந்தியன் ரெட்கிராஸ் இணைந்து காட்பாடி தற்காலிக காய்கறி உழவர் சந்தையில் கொரோனா நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது. தமிழக அரசின் வழிகாட்டுதல்படி உழவர் சந்தையில் உள்ள விவசாயிகள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர் நுகர்வோர் என 45 வயத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் வேலூர் மாவட்ட வேளாண் விற்பனை துறை மற்றும் காட்பாடி வட்ட இந்தியன் ரெட்கிராஸ் இணைந்து இன்று காட்பாடி டான்போஸ்கோ பள்ளி மைதானத்தில் அமைந்துள்ள தற்காலிக காய்கறி சந்தையில் உள்ள விவசாயிகளுக்கு கோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. காட்பாடி டான்போஸ்கோ பள்ளி வளாகத்தில் நடைபெற்று வரும் காய்கறி விற்பனை மையத்தில் தடுப்பூசி செலுத்தும் குழுவின் மருத்துவர் மார்க்ஸ்காஸ்ரோ தலைமையில் வேளாண் விற்பனை துறை துணை இயக்குநர் நரசிம்ம ரெட்டி முன்னிலையில்   பள்ளிக்குப்பம் சுகாதார செவிலியர் ரதி தடுப்பூசி செலுத்தினார்.  காட்பாடி ரெட்கிராஸ் அவைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன், வேளாண் விற்பனை அலுவலர் வீனாபிரியா, உதவி அலுவலர்கள் காயத்திரி, ஜெகதீஸ்வரன், வினோத்குமார் ரெட்கிராஸ் அவை துணைத்தலைவர் ஆர்.சீனிவாசன், பொருளாளர் வி.பழனி செயலாளர் எஸ்.எஸ். சிவவடிவு, வேலூர் மாநகராட்சி மேற்பார்வையாளர் கே.டேவிட் மற்றும் தூய்மை பணியாளர்கள், ஆகியோர் சமூக இடைவெளியை பின்பற்றிட பொதுமக்களை நெறிப்படுத்தினர்.
விவசாயிகள் அவர்தம் குடும்பத்தினருக்கும் நுகர்வோருக்கும் என 100க்கும் மேற்பட்டோருக்கு கரோனா நோய் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. 
காட்பாடி டான்போஸ்கோ பள்ளி வளாகத்தில் நடைபெற்று வரும் காய்கறி விற்பனை மையத்தில் தடுப்பூசி செலுத்தும் குழுவின் மருத்துவர் மார்க்ஸ்காஸ்ரோ தலைமையில் வேளாண் விற்பனை துறை துணை இயக்குநர் நரசிம்ம ரெட்டி முன்னிலையில்   பள்ளிக்குப்பம் சுகாதார செவிலியர் ரதி தடுப்பூசி செலுத்தினார்.  காட்பாடி ரெட்கிராஸ் அவைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன், வேளாண் விற்பனை அலுவலர் வீனாபிரியா, ஆகியோர்.
கருத்துகள்
Popular posts
தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
படம்
சமூக வலைத்தளங்களில் பல பெண்கள் குறி வைத்து வாழ்க்கையை சீரழித்த காமுகன் சென்னையில் கைது
படம்
பணியிடங்களில் நடக்கும் பாலியல் தொல்லைச் சம்பவங்களின் தாக்கம்...” ஐகோர்ட் நீதிபதி வேதனை!
படம்
அனைத்து தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி’’ - முதல்வர் ஸ்டாலின். தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை" என்று தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். தந்தையர் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை! தம் மக்கள் அவையத்து முந்தியிருக்க உழைக்கும் அனைத்துத் தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி நவில்வோம்!" என்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழக விளையாட்டுத்துறை மந்திரி உதயநிதி ஸ்டாலின் நடித்த கண்ணை நம்பாதே திரைப்பட வெளியீட்டு விழா கோலாகலம்!
படம்