ஆரணி மார்க்கெட் ரோடு தாமு காம்ப்ளக்சில் தடை செய்யப்பட்ட நம்பர் ஒன் காட்டன் சூதாட்டம் வெகு ஜோராக நடைபெறுவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை..?
திருவண்ணாமலை மாவட்டம் அடுத்த ஆரணி மார்க்கெட் ரோடு தாமு காம்ப்ளக்ஸில் தடைசெய்யப்பட்ட (லாட்டரி) சீட்டு நம்பர் ஒன் காட்டன் சூதாட்டம் உள்ளிட்ட சமூகவிரோத செயல்கள் மிகப்பெரிய அளவில் நடைபெற்று வருவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்,  விழுந்தால் வீட்டிற்கு விழாவிட்டால் நாட்டிற்கு என்ற வசனத்துடன் பேரறிஞர் அண்ணா அவர்கள் தமிழக முதல்வராக இருந்தபோது தமிழ்நாடு அரசு பரிசு சீட்டு நிறுவனம் தொடங்கப்பட்டது தமிழகம் முழுக்க அரசு பரிசு சீட்டுக்கள் அமோகமாக விற்பனையாகி வந்தன பரிசு விழுந்தால் பணக்காரனாகி விடலாம் என்ற ஆசையில் ஏழை எளிய நடுத்தர மக்களும் கூலித் தொழிலாளர்களும் ஆட்டோ ஓட்டுநர்களும் பரிசு சீட்டுகளை வாங்கி குவித்தனர் தங்களுடைய அன்றாட வருமானத்தை பரிசு சீட்டு வாங்குவதிலேயே செலவழித்தனர் லாட்டரி சீட்டு நம்பர் ஒன் காட்டன் சூதாட்டம்  பெயர்போன மணிப்பூர், நாகாலாத்தூர், மிசோரம், அம்சம், ஆகிய மாநிலங்களின் லாட்டரி சீட்டுக்களும் தொடர்ந்து தமிழகத்தில் விற்பனையாகின தமிழக அரசு பரிசு சீட்டு மட்டுமல்லாது வெளி மாநில லாட்டரி சீட்டுகளும் அதிக அளவில் விற்பனையில் கொடிகட்டிப் பறந்தன லாட்டரி சீட்டு வாங்கி பரிசு விழாமல் பணத்தை பறிகொடுத்த பல ஏழை எளிய நடுத்தர மக்கள் தொழிலாளர்கள் கடனாளிகளாகி உயிரிழந்த சம்பவங்களும் நடந்தன இதில் பலதரப்பட்ட மக்கள் சமூக ஆர்வலர்கள் அரசியல் கட்சியினர் கோரிக்கையால் கடந்த 2013ஆம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த அம்மையார் ஜெ ஜெயலலிதா அவர்களால் தமிழகத்தில் லாட்டரி சீட்டு விற்பனைக்கு தடை விதித்தார் அதன் மூலம் தமிழ்நாடு மட்டுமல்லாது வெளி மாநில லாட்டரி சீட்டுகள் சட்டவிரோத நம்பர் ஒன் காட்டன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டது, ஆனால் கேரளா, கோவா, மத்தியபிரதேசம், மகாராஷ்டிரா, பஞ்சாப், மேற்கு வங்கம், அஸ்ஸாம், அருணாசலப் பிரதேசம், மேகாலயா, மணிப்பூர், நாகாலாத்தூர், சிக்கிம், மிசோரம், ஆகிய மாநிலங்களில் சட்டரீதியாக நம்பர் ஒன் காட்டன் மற்றும் லாட்டரி சீட்டுக்கள் செயல்படுத்தப் பட்டு இருந்தன ஆனால் தமிழ்நாட்டில் லாட்டரி சீட்டு விற்பனை தடை செய்யப்பட்டு உள்ளபோதிலும் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுக்கள் நம்பர் ஒன் காட்டன் சூதாட்ட செயல்கள் மறைமுகமாக நடைபெற்றுக் கொண்டுதான் உள்ளது இதில் அரசியல்வாதிகள், வருவாய் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், ஆதரவுடன் தடை செய்யப்பட்ட நம்பர் ஒன் காட்டன் சூதாட்டம் லாட்டரி சீட்டு விற்பனை வெகு ஜோராக நடைபெற்றுக் கொண்டுதான் உள்ளது சில சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் முகவர்கள் மூலம் வெளி மாநிலங்களில் இருந்து லாட்டரி சீட்டுக்கள் கடத்தி வரப்பட்டு தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் விற்பனை செய்யப்படுகிறது பிறகு லாட்டரி சீட்டு பெயர் முகமதிப்பு சீட்டு எண் ஆகியவை சிறிய துண்டு காகிதங்களில் அச்சிடப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது தற்போது தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப லாட்டரி சீட்டுகளை நம்பர் ஒன் காட்டன் எண்கள் மட்டுமே சம்பந்தப்பட்ட மாநிலங்களில் இருந்து முகவர்களுக்கு மின்னஞ்சல் (இமெயில்) மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது மேலும் தொலைபேசிக்கு (எஸ்.எம்.எஸ்) குறுஞ்செய்தியாகவும் அனுப்பப்படுகின்றன இதனை முகவர்கள் கணினி வாயில் இயற்றி பதிவிறக்கம் செய்து வெள்ளை தாளில் அச்சிட்டு எடுத்து வைத்துக் கொள்கிறார்கள் லாட்டரி சீட்டு நம்பர் ஒன் காட்டன் சூதாட்டம் வாங்க வருபவர்களுக்கு வெள்ளைத் தாள்களை சீட்டின் முகமதிப்பு லாட்டரி சீட்டின் பெயரை குறிக்கும் எழுதி ஆகியவற்றை மட்டும் எழுதிக் கொடுத்து விடுகிறார்கள் குறைந்தபட்சம் முகமதிப்பாக ரூபாய் 100 தொடங்கி ரூபாய் 5000, என அதற்கும் மேலாக எழுதிக்கொண்டு செல்லுகின்றனர், நம்பர் ஒன் காட்டன் சூதாட்டத்தில் பரிசு விழுந்தால் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு பரிசுத் தொகையும் முகவர் மூலமே வழங்கப்படுவதாக கூறப்படுகிறது இவ்வாறு திருவண்ணாமலை மாவட்டத்தில் பகுதி வாரியாக நம்பர் ஒன் காட்டன் சூதாட்டம் சட்டவிரோத செயல்கள் நடைபெற்று கோடிக்கணக்கான மதிப்பு ரூபாய் அளவிற்கு நடைபெறுவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர், இதில் ஆரணி மார்க்கெட் ரோடு தாமு காம்ப்ளக்ஸில் கிருஷ்ணமூர்த்தி  உரிமையாளர், தலைமையில் செல்வம் மூலம் 5 பேர் கொண்ட சட்டவிரோதமாக நம்பர் ஒன் காட்டன் சூதாட்டத்தில் கோடிக்கணக்கான ரூபாய்கள் அரசுக்கு இழப்பீடு செய்து சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள், அரசியல்வாதிகள், வருவாய்த் துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள்,  துணையோடு கைகோர்த்துக் கொண்டு நம்பர் ஒன் காட்டன் சூதாட்டம் சட்ட விரோத செயல்கள் வெகு ஜோராக செயல்படுவதாக கூறுகின்றனர் சமூக ஆர்வலர்கள், ஏழை-எளிய நடுத்தர மக்களையும் கூலித் தொழிலாளர்களையும் பாதிப்புக்கு உள்ளாக்கும் தடை செய்யப்பட்ட  நம்பர் ஒன் காட்டன் சூதாட்டம் விற்பனை ஆரணியில் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது காலையிலேயே துண்டு சீட்டில் எழுதி வாங்க கூலித் தொழிலாளர்கள் ஆரணி மார்க்கெட் ரோடு தாமு காம்ப்ளக்ஸ்க்கு வந்து விடுகிறார்களாம் அக்கம்பக்கத்தினர் புலம்பித் தள்ளுகிறார்கள் மேலும் இதுகுறித்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும் சில சமூக ஆர்வலர்களும் தடை செய்யப்பட்ட நம்பர் ஒன் காட்டன் சூதாட்டத்தை பற்றி பலமுறை காவல் துறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்கப்படும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கை எடுக்கப்படவில்லை கூலித் தொழிலாளர்களை பாதிப்புக்கு உள்ளாக்கும் தடை செய்யப்பட்ட நம்பர் ஒன் காட்டன் சூதாட்டம் நடத்துபவர்கள் மீது மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை அதிகாரிகள் உடனடியாக விசாரணை நடத்தி தாமு காம்ப்ளக்ஸ் உரிமையாளர் மீதும் சட்ட விரோத செயல்களுக்கு துணைை போகும் காம்ப்ளக்ஸ் உரிமையாளரையும், (லாட்டரி சீட்டு)  நம்பர் ஒன் காட்டன் சூதாட்டம் நடத்துபவர்கள் மீதும் கைது செய்து பிணையில் வராத அளவிற்கு நடவடிக்கை தேவை என்கின்றனர் சமூக ஆர்வலர்கள் நடவடிக்கை எடுக்கப்படுமா என்று பொறுத்திருந்துதான் பார்ப்போம்....?

 
கருத்துகள்
Popular posts
தமிழக விளையாட்டுத்துறை மந்திரி உதயநிதி ஸ்டாலின் நடித்த கண்ணை நம்பாதே திரைப்பட வெளியீட்டு விழா கோலாகலம்!
படம்
திருவண்ணாமலை மாவட்ட டாஸ்மாக் மேலாளர் வசூல் வேட்டை தர்பார்
படம்
அனைத்து தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி’’ - முதல்வர் ஸ்டாலின். தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை" என்று தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். தந்தையர் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை! தம் மக்கள் அவையத்து முந்தியிருக்க உழைக்கும் அனைத்துத் தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி நவில்வோம்!" என்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
பணியிடங்களில் நடக்கும் பாலியல் தொல்லைச் சம்பவங்களின் தாக்கம்...” ஐகோர்ட் நீதிபதி வேதனை!
படம்
தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
படம்