திருவண்ணாமலை மாவட்டம் அடுத்த மேற்கு ஆரணி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் திருமண நல உதவி திட்டம் பெற லஞ்சம். தில்லாலங்கடி எம்.எஸ் விஜயா, ஜி.எஸ்கள் புவனா. அமுலு, ...?
திருவண்ணாமலை மாவட்டம் அடுத்த மேற்கு ஆரணி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் திருமண நிதியுதவி திட்டத்துக்கு பயனாளிகளிடம் லஞ்சம் கேட்டு பெறும் அவல நிலை தொடர்ந்து நிலவி வருகிறது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வசூல் வேட்டையில் ஈடுபடுவோர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள முன் வர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தமிழக அரசால் ஏழை எளிய பொதுமக்கள் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழக அரசாங்கம் உதாரணத்துக்கு பத்தாம் வகுப்பு வரை படித்த பெண்களுக்கு ரூபாய் 25000 ஒரு சவரன் தங்கம், அதேபோல் விதவை மகள் திருமணத்திற்கு ரூபாய் 25000 ஒரு சவரன் தங்கம், மறுமணத்திற்கும் ரூபாய் 25000 ஒரு சவரன் தங்கம், கலப்பு திருமணத்திற்கும் ரூபாய் 25000 ஒரு சவரன் தங்கம், பட்டதாரி பெண்களுக்கு ரூபாய் 50000 ஒரு சவரன் தங்கம், என டாக்டர் முத்துலட்சுமி அம்மையாரின் பெயரில் செயல்படுத்தப்பட்டு வருகிறது, இதில் ஒவ்வொரு ஆண்டும் நிதி ஒதுக்கி செயல்படுத்தி வருகிறது தமிழக அரசு. இந்த திட்டத்தில் பயன்பெற ஒவ்வொருவரும் வட்டார வளர்ச்சி, அலுவலகத்தில் சமூகப் பாதுகாப்பு விரிவாக்க அலுவலக பிரிவில் விண்ணப்பதாரர்கள் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு சமூக நல விரிவாக்க அலுவலர், மற்றும் ஊர் நல அலுவலர்களின் மூலமாக ஒப்புதலின் பேரில் அனைத்து ஆவணத்துடன் விண்ணப்பித்தார்கள் திருமணத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பாகவே இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தின் நகல்களை எம்.எஸ் சமூக நல விரிவாக்க அலுவலர் (மற்றும் ஜி.எஸ்.,) ஊர் நல அலுவலர்களிடம் இ-சேவை மூலம் பதிவு செய்த ஒப்புதல் சான்றுகளுடன் மணப்பெண்ணின் பள்ளிச் சான்று, கல்லூரி புரோபஷனல், திருமண அழைப்பிதழ், வங்கி கணக்கு புத்தகம், புகைப்படம், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, சாதி சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், இவை அனைத்தும் மூன்று செட் நகல்கள். எடுத்துச்சென்று எம்.எஸ். மற்றும் ஜி.எஸ்களிடம் வழங்க வேண்டும் இவர்கள் திருமணத்திற்கு முன்னதாக திடீரென மணப்பெண் வீட்டிற்கு சென்று ஆய்வு மேற்கொள்வார்கள். எம்.எஸ் மற்றும் ஜி.எஸ்கள் அந்த சமயத்தில் மணப்பெண்ணின் வசதி வாய்ப்புகளை அறிந்து அதற்கு ஏற்றாற்போல் லஞ்சப் பணமாக மணப் பெண் வீட்டாரிடம் வசூலித்து விடுவார்களாம், திருவண்ணாமலை மாவட்டம் அடுத்த மேற்கு ஆரணி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் திருமண நல உதவித் திட்டத்தில் சமூக நலப் பாதுகாப்பு விரிவாக்க அலுவலர்களாக பணியாற்றி வருபவர் திருவண்ணாமலை மாவட்டம் போளூரை சார்ந்த (எம்.எஸ்.) விஜயா மற்றும் சமூக நலப் பாதுகாப்பு ஊர் நல அலுவலர்களாக திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த (ஜி.எஸ்கள்) புவனா மற்றும் அமுலு பணியாற்றி வருகிறார்கள் இவர்கள் கூட்டணியிலும் ரூபாய் 25 ஆயிரம் ஒரு சவரன் தங்கம் திட்டத்திற்கு, ரூபாய் 7000. ஆயிரம் அதேபோல் பட்டதாரி பெண்களுக்கு வழங்கப்படும் ரூபாய் 50000 ஒரு சவரன் தங்கம் திட்டத்திற்கு, ரூபாய் 10000. என லஞ்சம் வாங்குவதாக விண்ணப்பதாரர்கள் சொல்லு கின்றனர். இவர்கள் கேட்கும் லஞ்சப் பணத்தை கொடுக்கவில்லை என்றால் ஏதாவது ஒரு காரணம் சொல்லி விண்ணப்பத்தை ஓரம்கட்டி விடுவார்களாம். இதற்கு பயந்து வந்து விண்ணப்பதாரர்கள் அந்த வசூல் வேட்டையர்கள் கராராக கேட்கும் பணத்தை கொடுத்து காரியத்தை நகர்த்திக் கொள்கிறார்களாம். இந்த பணத்தில் மாவட்ட அதிகாரிகளுக்கும் பங்கு இருப்பதாக சொல்லப்படுகிறது. லஞ்சம் வாங்குவதுதான் இவர்களது டெக்னிக். இதற்கென தனி பாடம் கற்றுக் கொண்டு இருப்பார் போல் தெரிகிறது எம்.எஸ் விஜயா இவர் யாரிடம் எப்படிப் பேசுவது எப்படி தட்டி சொல்லுவது அப்பாவி பொதுமக்களை ஏசுவது ஏய் ஓய் என்று இதுபோன்ற வார்த்தைகளை உபயோகப்படுத்தி அப்பாவி பயனாளிகளை நாள்தோறும் திட்டித் தீர்த்து விடுகிறாராம், மேலும் இது தவிர்த்து தனது வீட்டில் இருக்கும் கோபதாபங்களை அலுவலகத்தில் உடன் பணிபுரியும் ஜி.எஸ்களிடம் தான் காட்டுவாராம், மேலும் கொடி நாள் வசூல், ராணுவ வீரர் தின வசூல் என விண்ணப்பதாரர்களை தொந்தரவு செய்து அவர்களிடம் போலி பில்களை காட்டி லஞ்சமாக பணத்தை பெற்றுக்கொண்டு வலம் வருகிறார்களாம், எம்.எஸ் மற்றும் ஜி.எஸ்கள் என்றால் கூட இது தவிர ஏற்கனவே திருமண நல உதவித் திட்டத்திற்கு சரியாக நிதி ஒதுக்காமல் போகவே கடன் உடன் வாங்கி திருமணத்தை நடத்திய தாய்மார்கள் கடன்காரர்களுக்கு கடனை திருப்பிச் செலுத்த அரசின் திருமண நல உதவி திட்டம் எப்போது வரும் என்று தவியாய் தவித்த நிலையில்தான் தமிழகம் முழுவதும் வட்டார வளர்ச்சி அலுவலகம் வாரியாக திருமணம் முடிந்த பெண்களுக்கு நிதியை ஒதுக்கி திருமண நிதி உதவித் திட்டம் மூன்று ஆண்டுக்கும் சேர்த்து நடப்பாண்டில் மணப்பெண்களுக்கு வழங்கப்பட்டது, தில்லாலங்கடி எம்.எஸ் விஜயா இவர் திருவண்ணாமலை மாவட்டம் குழாயூரில் அங்கன்வாடி பணியாளராக சேர்ந்து சில ஆண்டுகளுக்கு பிறகு கிரேடில் தேர்வுசெய்து ஜி.எஸ் ஆக பதவி உயர்வு பெற்று சேத்துப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணிக்கு சேர்ந்த முதலே லஞ்சம் என்ற பகல் கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளார் என்பது அப்பகுதி மக்களிடம் விசாரணை செய்தபோது வெளிச்சத்திற்கு வராத தகவல்களும் உள்ளது இவர் எப்போதும் எந்த பிளாக்கிற்கு பணிக்கு சென்றாலும் அந்த பிளாக்கில் 5 முதல் 10 வரை புரோக்கர் வைத்துக்கொண்டு அவர்கள் மூலமாக கொண்டுவரும் அப்ளிகேஷன்களை வாங்கிக்கொண்டு மேலும் வாங்க வேண்டிய லட்சங்களை வசூலித்து கொண்டு பரிந்துரை செய்து வருவாராம், யாராவது கேள்வி கேட்டால் அவரை நைசாக பேசி வேலையை முடித்து தருவதாக பாவனை காட்டுவாராம் அரசியல்வாதிகள் மேல் அதிகாரிகள் பரிந்துரை செய்தால் அந்த அப்ளிகேஷனை மட்டும் பரிந்துரைக்கு ஏற்றுக்கொள்வாரா மேலும் அப்பாவி பொதுமக்கள் யாராவது கேள்வி கேட்டால் அவர்களை மாதக்கணக்கில் அலைய விட்டு அவர்களை மன உளைச்சலுக்கு ஆளாகி விடுவாராம் கில்லாடி எம்.எஸ் விஜயா என்கின்றனர் மேலும் இவர் கிரேடு ஒன்றில் தேர்வாகி எம்.எஸ் ஆக பதவி உயர்வு பெற்று ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணிக்கு சேர்ந்து ஒரு வருடம் பணியாற்றிய காலத்தில் பழைய பயனாளிகளிடமும் உங்கள் மனு ஆவணங்களுடன் ஒரு சில ஆதாரங்கள் சரியாக கொடுக்கப் படவில்லை என மீண்டும் ஒருமுறை ஆவணங்கள் எங்களிடம் எடுத்து வந்து கொடுத்துவிட்டு அதனை நாங்கள் சரிபார்த்து பரிந்துரைக்கிறோம் என்று கூறி அவர்களிடம் இருந்து ரூபாய் 3000. முதல் ரூபாய் 5000. வரை பணத்தைப் பெற்றுக் கொள்கிறார்களாம், மேலும் காவேரிப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலகதிற்கு உட்பட்ட பயனாளிகளின் ஆவணம் சரியாக இருந்தும் அவர் கேட்ட லஞ்சப் பணத்தைக் கொடுத்தும் இதுவரை எங்களுக்கு திருமண நலத்திட்ட உதவி வந்து சேரவில்லை மாதக்கணக்கில் வருடக்கணக்கில் அலைந்தும் எங்களுக்கு பயன் இல்லை என்கிறார்கள் பாமர பயனாளிகள் இவர்களுக்கு நியாயம் கிடைக்குமா என்று சமூக ஆர்வலர்கள் வேதனை கூறுகின்றனர், இதுதவிர எம்.எஸ் விஜயா என்பவர் ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒரு வருடம் பணி செய்துவிட்டு தனது சொந்த மாவட்ட திருவண்ணாமலை மேற்கு ஆரணி வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கு பணி மாறுதல் கோரி அமைச்சரிடம் பல லட்சம் ரூபாய் கொடுத்து பணி மாறியதாக கூறப்படுகிறது இந்த அலுவலகத்திலும் பணிக்கு சேர்ந்தும் தில்லாலங்கடி வேலைகளை தொடர்ந்து அரங்கேற்றி வருவதாக அந்த அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் கூறும்போது இவர்களுக்கு எப்போதும் லஞ்ச முகமாகவே இருக்கிறது பொது மக்களை அன்றாடம் அலைய விடுவது டார்ச்சல் செய்வதே வாடிக்கையாகிப் போய்விட்டது என்று புலம்பித் தள்ளுகின்றனர், மேலும் மனசாட்சி இல்லாமல் எம்.எஸ் விஜயா, மற்றும் ஜிஎஸ்கள் புவனா, அமுலு இவர்கள் கட்டாய வசூல் வேட்டை நடத்தி வருகின்றனர். இதற்கெல்லாம் எப்போது தீர்வு கிட்டும் என்று விண்ணப்பதாரர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர், இனியாவது சம்பந்தப்பட்ட சமூக பாதுகாப்பு நலத்துறை அமைச்சர் மற்றும் சமூக பாதுகாப்பு நல இயக்குநர் நடவடிக்கை எடுப்பார்களா? என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர் ஏழை அப்பாவி பயனாளிகள்
மேலும் திருவண்ணாமலை மாவட்டம் பி.ஓ (பொறுப்பு) சமூக பாதுகாப்பு நல அலுவலராக இருப்பவர். கந்தன் இவர் வந்த பிறகு திருமண நிதி உதவி திட்டத்தில் லஞ்சம் வாங்குவது அதிகரித்துள்ளது என்று சொல்லப்படுகிறது. இதனால் எம்.எஸ் மற்றும் ஜி.எஸ்கள் வாங்கும் லஞ்ச பணத்தில் மாவட்ட சமூக பாதுகாப்பு நல அலுவலர் (பொறுப்பு) பி.ஓ கந்தனுக்கு மாதம் மாதம் ஒவ்வொரு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இருந்து திருமண நல உதவி திட்டம் பிரிவில் இருந்தும் பங்கு சென்றுவிடுவதால் அவர் எம்.எஸ் விஜயா மற்றும் ஜி.எஸ்கள் புவனா, அமுலு. வாங்கும் லஞ்ச குற்றச்சாட்டு மீது உரிய நடவடிக்கை எடுப்பதில்லையாம். எனவே மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கையை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும், இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் லஞ்சம் கேட்கும் நபர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டுள்ளார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் தமிழகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையால் எத்தனை வழக்குகள் பதிவாகி உள்ளது என்று கேள்வி எழுப்பிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மேலும் லஞ்சம் வாங்கி அதிகாரிகள் மீது எத்தனை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா பற்றி துருவி கேள்வி எழுப்பப்பட்டது