அதிகார துஷ்பிரயோகம் செய்யும் வேலூர் மாவட்ட மக்கள் செய்தி தொடர்பு துறை அலுவலர் அம்பலூர் சு. மோகன் ...?
வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான அ.சண்முகசுந்தரம் அவர்கள் பத்திரிகைத்துறையைசேர்ந்த 110 நபர்களுக்கு தேர்தல் அடையாள அட்டைக்கு ஒப்புதல் வழங்கினார். இரண்டு நாட்கள் ஆகியும். இன்னும் பி.ஆர்.ஓ- அம்பலூர் சு. மோகனால் வழங்கப்படவில்லை . இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சித் தலைவரும், மாவட்ட தேர்தல் அலுவலரு மான அ.சண்முகசுந்தரம் அவர்களுக்கு பத்திரிகையாளர்களிடம் இருந்து புகார்கள் வந்தவண்ணம் இருந்தன. எனவே, பி.ஆர்.ஓ அம்பலூர் சு. மோகன் வசமுள்ள அனைத்து தேர்தல் அடையாள அட்டைகளையும் தேர்தல் வட்டாட்சியர் ஶ்ரீராம்வசம் உடனடியாக ஒப்படைக்க உத்திரவிட்டார். 110 நபர்களில் அடையாள அட்டை கிடைக்கப் பெறாதவர்கள் ஶ்ரீராம் வட்டாட்சியரை உடனே அணுகி பெற்றுக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித் தலைவரும், மாவட்டத் தேர்தல் அலுவலருமான அ.சண்முகசுந்தரம் கேட்டுக்கொண்டார். தேர்தல் சமயங்களில் பி.ஆர்.ஓ அலுவலகம் மூலமாகவே தேர்தல் அட்டை வழங்குவது வழக்கம். ஆனால் இந்த முறை தேர்தல் அட்டை பி.ஆர்.ஒ மூலமாக வழங்கும் அதிகாரத்தை பறித்து தேர்தல் வட்டாட்சியர் மூலமாக பத்திரிகையாளர்களுக்கு தேர்தல்அடையாள அட்டை வழங்குவது குறிப்பிடத்தக்கது. மேலும் முறையாக விண்ணப்பித்து தேர்தல் அட்டை கிடைக்காதவர்கள் இன்று மாவட்ட ஆட்சித் தலைவரும், மாவட்டத் தேர்தல் அலுவலருமான அ.சண்முகசுந்தரம் அவர்களிடம் எழுத்துப்பூர்வமாக மனுஅளித்தனர். அதன் பின் பி .ஆர் .ஓ அம்பலூர் சு. மோகன் மீது பத்திரிகையாளர்கள் சரமாரியாக புகார் கூறினர்.இந்த சம்பவம் பத்திரிகையாளர்கள் மத்தியில் மிகந்த பரபரப்பை ஏற்படுத்தியது. தேர்தல் முடிந்த பிறகு பி.ஆர்.ஓ அம்பலூர் சு. மோகன் மீது நடவடிக்கை எடுப்பதுடன் பணி மாற்றம் நிச்சயம் என்கிறது மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம்.