ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பி.டி.ஓவாக பணியாற்றி வருபவர் காவேரிபாகத்தை சேர்ந்த வெங்கடாசலம் இவர் மீது பி.டி.ஓ அலுவலக வட்டாரத்தில் பேசப்படுவது இவருக்கு கொடுக்கவேண்டிய கமிஷனை கொடுத்துவிட்டால் எந்தவித பணிகளையும் பார்க்காமல் கண்மூடிக் கொண்டு கையெழுத்து போட்டு பில் பாஸ் செய்து விடுவாராம் இதனால் இவரது அதிகாரத்துக்கு உட்பட்ட பணிகள் எல்லாம் தரமற்ற முறையில் நடந்து வருவதாக கூறப்படுகிறது தனக்கு கொடுக்க வேண்டிய கமிஷன் வரவில்லை என்றால் பில் பாஸ் செய்யாமல் சட்டம் நீதி நேர்மை என்று பேசுவாராம் ஏதாவது சிக்கல் ஆகிவிட்டால் அரசியல்வாதிகள் மீது குறைகள் சொல்வாராம் அ.தி.மு.க ஆட்சியில் கீழ்மட்டத்தில் இருந்து மேல் மட்டம் வரை ஊழல் தான் தி.மு.க தலைவர் ஸ்டாலின் சொன்னது போல் கமிஷன் கரப்ஷன் தான் இந்த ஆட்சியில் மாவட்டச் செயலாளர், ஒன்றிய செயலாளர், எல்லாம் செய்யாத வேலைக்கு எல்லாம் பில் பாஸ் செய்ய சொல்லி டார்ச்சர் செய்வதாக புலம்புகிறாராம் பி.டி.ஓ வெங்கடாசலம் இதுமட்டுமல்லாமல் பசுமை திட்டத்திற்கு வீடுகளுக்கு இவருக்கு தரவேண்டிய கமிஷன் கொடுக்கவில்லை என்றால் பசுமை வீட்டுக்கு பரிந்துரை செய்ய மாட்டாராம் இவர் மீது உள்ள லஞ்ச ஒழிப்புகள் காரணமாகவும் சங்கத்தின் மூலமாக அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு அதன் காரணமாகவும் இவருக்கு 17,பி வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது மேலும் தற்போது சட்டமன்றத் தேர்தல் அறிவித்துள்ள நிலையில் சில பில்கள் எல்லாம் முன் தேதியிட்டு பில் பாஸ் செய்து வருவதாகவும் சொல்லப்படுகிறது எனவே பி.டி.ஓ வெங்கடாசலம் மீது தேர்தல் அதிகாரிகள் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.. இவர் மீது நடவடிக்கை பாயுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
கமிஷன் கரப்ஷன் திமிரி பி.டி.ஓ அலுவலகத்தில் திமிர் பிடித்த பி.டி.ஓ வெங்கடாசலம்..