ஆலங்காயம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் திருமண உதவி திட்டத்தில் லஞ்சம்
  திருப்பத்தூர் மாவட்டம்,   
ஆலங்காயம் பி.டி.ஓ. அலுவலகத்தில் திருமண நிதியுதவி திட்டத்துக்கு பணம் வழங்க லஞ்சம் கேட்டு பெறும் அவல நிலை தொடர்ந்து நிலவி வருகிறது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வசூல் வேட்டையில் ஈடுபடுவோர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள முன் வர வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தமிழக அரசு ஏழை எளிய மக்கள் பயன் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. உதாரணத்துக்கு பத்தாம் வகுப்பு வரை படித்த பெண்களுக்கு ரூபாய் 25.000 ஒரு சவரன் தங்கம், அதேபோல் விதவை மகள் திருமணத்திற்கு ரூபாய் 25.000, ஒரு சவரன் தங்கம், மறுமணத்திற்கும் ரூபாய் 25.000 ஒரு சவரன் தங்கம், கலப்பு திருமணத்திற்கும் ரூபாய் 25.000 ஒரு சவரன் தங்கம், பட்டதாரி பெண்களுக்கு ரூபாய் 5.0000 ஒரு சவரன் தங்கம், என செயல்படுத்த ஒவ்வொரு ஆண்டும் நிதி ஒதுக்கி செயல்படுத்தி வருகிறது தமிழக அரசு. இந்த திட்டத்தில் பயன்பெற ஒவ்வொருவரும் ஒவ்வொரு பி.டி.ஓ,அ விண்ணப்பதாரர்கள் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு எம்.எஸ் ஜி.எஸ், மூலமாக விண்ணப்பித்தார்கள் விண்ணப்பிக்க வேண்டும். திருமணத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பாக இ சேவை மையம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தின் நகல்களை எம்.எஸ்., சமூக நல விரிவாக்க அலுவலர் (மற்றும் ஜி.எஸ்.,) ஊர் நல விரிவாக்க அலுவலர்கள் ஆகியோரிடம் மூன்று நகல்கள் வழங்க வேண்டும்.
இவர்கள் திருமணத்திற்கு முன்னதாக திடீரென மணப்பெண் வீட்டிற்கு வந்து ஆய்வு மேற்கொள்வார்கள். எம். எஸ். மற்றும் ஜி.எஸ்கள் அந்த சமயத்தில் மணப்பெண்ணின் வசதி வாய்ப்புகளை அறிந்து அதற்கு ஏற்றாற்போல்திருப்பத்தூர்மாவட்டம், ஆலங்காயம் பி.டி.ஓ .,அலுவலகத்தில் தற்போது பணியாற்றி வருபவர்எம்.எஸ் வளர்மதி மற்றும் ஜி.எஸ்கள் (வைஜெயந்தி,இவர் முன்னாள் எம்.எல்.ஏ மனைவி ஆவார்) அருணாகுமாரி  ஆகிய மூவர்கூட்டணியும் அருணாகுமாரிரூபாய் 25 ஆயிரம் ஒரு சவரன் திட்டத்திற்கு, ரூபாய் 10 ஆயிரம் அதேபோல் பட்டதாரி பெண்களுக்கு வழங்கப்படும் ரூபாய் 50,000 ஒரு சவரன் திட்டத்திற்கு, ரூபாய் 20000 லஞ்சம் வாங்குவதாக விண்ணப்பதாரர்கள் சொல்லு கின்றனர். இவர்கள் கேட்கும் லஞ் சப்பணத்தை கொடுக்க வில்லை என்றால் ஏதாவது ஒரு காரணம் சொல்லி விண்ணப்பத்தை ஓரம்கட்டி விடுவார்களாம். இதற்கு பயந்து வந்த வரை லாபம் என விண்ணப்பதாரர்கள் இவர்கள் கேட்கும் பணத்தை கொடுத்து காரியத்தை முடித்துக்கொள்கிறார் கள். இந்த பணத்தில் அதிகாரிகளுக்கும் பங்கு இருப்பதாக சொல்லப்படுகிறது. லஞ்சம் வாங்குவதுதான் இவர்களது டெக்னிக்.
இது தவிர கொடி நாள் வசூல், ராணுவ வீரர் தின வசூல் என விண்ணப்பதாரர்களை தொந்தரவு செய்து அவர்களிடம் போலி பில்களை காட்டி லஞ்சமாக பணத்தை பெற்றுக்கொண்டு வலம் வருகிறார்களா எம்.எஸ் மற்றும் ஜி.எஸ்கள் என்றால் இது தவிர ஏற்கனவே அரசு திருமண நிதி உதவித் திட்டத்திற்கு சரியாக நிதி ஒதுக்காமல் போகவே கடன் உடன் வாங்கி திருமணத்தை நடத்திய தாய்மார்கள் கடன்காரர்களுக்கு கடனை திருப்பிச் செலுத்த அரசின் திருமண நிதி உதவி எப்போது வரும் என்று தவியாய் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில்தான் மனசாட்சி இல்லாமல் எம்.எஸ்களும் கட்டாய வசூல் வேட்டை நடத்தி வருகின்றனர். இதற்கெல்லாம் எப்போது தீர்வு கிடைக்கும் என்று விண்ணப்பதாரர்கள் புலம்புகின்றனர். இனியாவது சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் மற்றும் சமூக நல இயக்குநர் நடவடிக்கை எடுப்பார்களா? என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர் ஏழை மக்கள். மேலும் திருப்பத்தூர் மாவட்ட (பொறுப்பு)சமூகநல அலுவலராக இருப்பவர் முருகேஸ்வரி.
இவர் வந்த பிறகு திருமண நிதி உதவி திட்டத்தில் லஞ்சம் வாங்குவது அதிகரித்துள்ளது சொல்லப்படுகிறது.இதனால் எம்.எஸ் ஜி.எஸ்களுக்கும் வாங்கும் லஞ்சபணத்தில்மாவட்ட சமூக நல அலுவலர் முருகேஸ்வரிக்கு பங்கு கொடுப்பதால் அவர்  எம்.எஸ்., ஜி.எஸ்.,கள் வாங்கும் லஞ்ச குற்றச்சாட்டு மீது உரிய நடவடிக்கை எடுப்பதி ல்லையாம்.எனவே மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கையை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அத்துடன் இதுகுறித்து  லஞ்ச ஒழிப்பு  காவல்  துறை லஞ்சம் கேட்கும் நபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டுள்ளவர்கக் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கருத்துகள்
Popular posts
தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
படம்
சமூக வலைத்தளங்களில் பல பெண்கள் குறி வைத்து வாழ்க்கையை சீரழித்த காமுகன் சென்னையில் கைது
படம்
பணியிடங்களில் நடக்கும் பாலியல் தொல்லைச் சம்பவங்களின் தாக்கம்...” ஐகோர்ட் நீதிபதி வேதனை!
படம்
அனைத்து தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி’’ - முதல்வர் ஸ்டாலின். தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை" என்று தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். தந்தையர் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை! தம் மக்கள் அவையத்து முந்தியிருக்க உழைக்கும் அனைத்துத் தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி நவில்வோம்!" என்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழக விளையாட்டுத்துறை மந்திரி உதயநிதி ஸ்டாலின் நடித்த கண்ணை நம்பாதே திரைப்பட வெளியீட்டு விழா கோலாகலம்!
படம்