இசைப் பேரரசி பின்னணி பாடகி பி சுசீலா அவர்களின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது

பின்னணி பாடகி இசைப்பேரரசி பி.சுசீலா தாயாரின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது 



 


தென்னிந்திய திரை உலகின் புகழ்பெற்ற பின்னணி பாடகி பி.சுசீலாவின் பிறந்த நாள் .


 அவரை பற்றிய அரிய முத்துகள் பத்து...


ஆந்திர மாநிலம் விஜயநகரத்தில் பிறந்தவர். தந்தை ஒரு வக்கீல். பள்ளியில் படிக்கும்போதே இசை யில் ஏற்பட்ட ஆர்வத்தால் ஆந்திரா வின் புகழ்பெற்ற இசை மேதை துவாரம் வெங்கடசாமி நாயுடுவிடம் முறையாக இசை பயின்றார். ஆந்திர பல்கலைக்கழகத்தில் இசைத்துறையில் டிப்ளமோ முடித்தார்.


 பதினைந்து வயதில் சென்னை வானொலியில் பாப்பா மலர் நிகழ்ச்சியில் பாடத் தொடங்கினார். இவரது இசைத் திறமையால் கவரப்பட்ட இயக்குநர் கே.எஸ். பிரகாஷ்ராவ் தனது படத்தில் இவரை முதன் முதலாக பின்னணி பாட வைத்தார். 1955ல் இவர் பாடிய ‘எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும்..’, ‘உன்னைக் கண் தேடுதே…’ பாடல்களால் பிரபலமடைந்தார்.


 பி. லீலா, எம்.எல். வசந்தகுமாரி, ஜிக்கி போன்ற பிரபலங்கள் ஆதிக்கம் செலுத்தி வந்த பின்னணி உலகில் இந்த இளம் பாடகியின் பயணம் அவ்வளவு சுலபமானதாக இல்லை. தனித்தன்மை வாய்ந்த தன் குரல் இனிமையால் தொடர்ந்து பல மொழிகளில் ஹிட் பாடல்களை அளித்த இந்த இசையரசியின் ஆட்சி, அரை நூற்றாண்டுகள் தொடர்ந்தது.


1955 முதல் 1985 வரை வெளிவந்த கிட்டத்தட்ட அனைத்து படங்களிலும் இவர் பின்னணி பாடியுள்ளார். தெலுங்கில் கண்டசாலா, தமிழில் டி.எம். சவுந்திரராஜன், கன்னடத்தில் பி.பி. நிவாஸ் ஆகியோருடன் இவர் பாடிய டூயட் பாடல்கள் தென்னிந்திய திரையிசை உலகில் சரித்திரம் படைத்தன. குறிப்பாக, டி.எம். சவுந்திரராஜனுடன் தமிழில் நூற்றுக்கணக்கான டூயட் பாடல்களைப் பாடியுள்ளார்.


 தாய் மொழி தெலுங்கு என்றாலும் இவரது தமிழ் உச்சரிப்பு தனித்தன்மையுடன் விளங்கியது. நாகேஸ்வரராவ், விஸ்வநாதன்-ராமமூர்த்தி, இருவரும் பிரிந்த பின் எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைப்பில் தொடங்கி, இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான் என ஏராளமான இசையமைப்பாளர்களின் இசையில் பாடியுள்ளார்.


 5 முறை தேசிய விருதுகள், பத்ம பூஷன் விருது, 10க்கும் மேற்பட்ட மாநில விருதுகள், கலைமாமணி பட்டம், ஆந்திர மாநில அரசினர் விருது போன்றவை குறிப்பிடத்தக்கவை.


25,000க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி, இந்தி, ஒரியா, சமஸ்கிருதம், சிங்களம் என பல மொழிப் படங்களிலும் பாடல்களைப் பாடியுள்ளார்.


இந்தியாவின் இசைக்குயில் லதா மங்கேஷ்கருடன் இவருக்கு நெருங்கிய நட்பு உண்டு. 2005 வரை ஹிட் பாடல்களை அளித்து வந்தார். தற்போது பக்திப் பாடல்கள், மெல்லிசை பாடல்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டார்.


பல்வேறு ஆடியோ நிறுவனங்களுக்காக 1000க்கும் மேற்பட்ட பக்திப் பாடல்களைப் பாடியுள்ளார்.


ஒவ்வொரு வருடமும் இவரது பிறந்த நாளான நவம்பர் 13 அன்று இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டு அதில் வரும் வருவாயில், வறுமையில் உள்ள இசைக்கலைஞர்களுக்கு மாதாந்திர பென்ஷன் தொகையை அறக்கட்டளை மூலம் வழங்கி வருகிறார்.


 


பின்னணி பாடகி பி.சுசீலா ‘கின்னஸ்’ சாதனையில் இடம் பிடித்தார்


 


17,695 பாடல்கள் தனியாக பாடி உள்ளார்


 


சென்னை, சினிமா பின்னணி பாடகி பி.சுசீலா இதுவரை 17,695 பாடல்கள் தனியாக பாடி சாதனை புரிந்துள்ளார். இதற்காக அவரது பெயர் ‘கின்னஸ்’ சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.


 


இனிய குரலில் காலத்தால் அழிக்க முடியாத பாடல்களை பாடி ரசிகர்கள் மனதை அரை நூற்றாண்டுக்கும் மேலாக வசியப்படுத்தி இருப்பவர், பி.சுசீலா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் இவர் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் 40 ஆயிரம் பாடல் கள் பாடி இருக்கிறார்.


 


1953-ல் பிரகாஷ்ராவ் இயக்கத்தில், ‘பெற்றதாய்’ என்ற படத்தில் ‘எதுக்கு அழைத்தாய்’ என்ற பாடலை பாடி சினிமாவுக்கு அறிமுகமானார் பி.சுசீலா. 1955-ல் ‘கணவனே கண்கண்ட தெய்வம்’ படத்தில் இவர் பாடிய ‘உன்னை கண்தேடுதே,’ ‘எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும்’ ஆகிய பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஒலித்து பி.சுசீலாவை திரும்பி பார்க்க வைத்தன. இவருக்கு முன்பு பி.லீலாவும், எம்.எல்.வசந்தகுமாரியும்தான் முன்னணி பாடகிகளாக இருந்தனர்.


 


பி.சுசீலாவின் வசீகர குரல் ரசிகர்களின் இதயங்களை ஈர்த்தது. பாடும் வாய்ப்புகள் குவிந்தன. எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில், டி.எம்.சவுந்தரராஜன், பி.சுசீலா பாடிய டூயட் பாடல்கள் ரசிகர்களை கட்டிப்போட்டன. இருவரும் இணைந்து 700-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி இருக்கிறார்கள். 1969-ல் உயர்ந்த மனிதன் படத்தில் பி.சுசீலா பாடிய ‘நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா’ பாடலுக்கு தேசிய விருது கிடைத்தது.


கருத்துகள்
Popular posts
லஞ்ச ஒழிப்புத்துறை தனது பாக்கெட்டில் இருப்பதாக நினைத்துக் கொண்டு திமிராக இருக்கும் ஆலங்காயம் ஸ்கீம் பி.டி.ஓ மணவாளன் ..!
படம்
அனைத்து தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி’’ - முதல்வர் ஸ்டாலின். தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை" என்று தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். தந்தையர் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை! தம் மக்கள் அவையத்து முந்தியிருக்க உழைக்கும் அனைத்துத் தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி நவில்வோம்!" என்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசின் தவறான நிர்வாகமே காரணம்” - மேற்கு வங்க விபத்து; கார்கே புதுடெல்லி: மேற்கு வங்க ரயில் விபத்துக்கு நரேந்திர மோடி அரசின் 10 ஆண்டு கால தவறான நிர்வாகமே காரணம் என்று காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. முன்னதாக இன்று காலை மேற்குவங்கத்தில் கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் ரயில் ஓட்டுநர் உள்பட 15 பேர் உயிரிழந்தனர்.மல்லிகார்ஜுன் கார்கே கண்டனம்: இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரி அருகே நிகழ்ந்த ரயில் விபத்தில் பலர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்துச் செய்தி மிகுந்த துயரத்தை ஏற்படுத்தி உள்ளது. விபத்துக் காட்சிகளைப் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பங்களை எண்ணி என் இதயம் வேதனை கொள்கிறது. இந்த துயரமான நேரத்தில், அவர்கள் ஒவ்வொருவருக்கும் எனது ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறோம். பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக முழுமையான இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.ADVERTISEMENTHinduTamil12June3 கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசு, ரயில்வே அமைச்சகத்தை மிகவும் தவறாக நிர்வகித்து வந்துள்ளது. சுய விளம்பரத்துக்கான மேடையாக, கேமராவால் இயக்கப்படும் ஒரு துறையாக திட்டமிட்ட ரீதியில் மோடி அரசு அதனை மாற்றிவிட்டது. ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக இதனை சுட்டிக்காட்டுவது எங்கள் கடமை என்று கருதுகிறோம். இந்த அப்பட்டமான யதார்த்தத்தின் மற்றொரு நினைவூட்டலாகவே இன்றைய சோகச் சம்பவம் இருக்கிறது. எங்கள் மீது குற்றம் காணாதீர்கள். நாங்கள் எங்கள் கேள்விகளை தொடர்ந்து முன்வைத்துக்கொண்டே இருப்போம். மேலும், இந்திய ரயில்வேயை கைவிட்ட குற்றத்தை இழைத்த மோடி அரசை அதற்கு பொறுப்பேற்கச் செய்வோம்" என தெரிவித்துள்ளார்.AdvertisementAdvertisementஅரசுக்கு பவன் கெரா கேள்வி: காஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் செய்தித் தொடர்பு பிரிவின் தலைவர் பவன் கெரா, ​​“இதுபோன்ற மனதை உலுக்கும் சம்பவங்களின் பட்டியல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஆனால், அரசாங்கம், அமைச்சகம் அல்லது அமைச்சர் என யாரும் எதையும் கற்றுக்கொள்ளவில்லை. விபத்து நடந்த இடத்துக்கு மத்திய ரயில்வே அமைச்சர் சென்றிருக்கிறார். அங்கிருந்து ஒரு வீடியோவை அவர் வெளியிடுவார். பின்னர் அதற்காக அவர் பாராட்டும் பெறுவார். இதுபோன்ற விபத்துக்களுக்காக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த வரலாறு எங்கள் கட்சிக்கு உண்டு. அதுபோன்ற ஒரு முன்னுதாரணத்தை படைத்தவர்கள் நாங்கள். விபத்து நடந்த இடத்துக்கு ரயில்வே அமைச்சர் செல்வது என்பது அவரது கடமை. ஆனால், இதுபோன்ற விபத்துக்கள் ஏன் அடிக்கடி நடக்கின்றன?” என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
படம்
*ரயில் விபத்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது-பிரதமர் இரங்கல்.*மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த ரயில் விபத்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல்; காயமடைந்தவர்கள் குணமடைய பிரார்த்திக்கிறேன்.விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.மேற்கு வங்க ரயில் விபத்து தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டறிந்த பின் பிரதமர் மோடி.மேற்குவங்க ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரயில்வே அமைச்சகம் சார்பில் நிவாரணம் அறிவிப்பு.உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், தீவிர காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.2.5 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணம்.
உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்க வேண்டும் : அரசுக்கு ஜனநாயக எழுச்சி கழக தலைவர் காயல் அப்பாஸ் கோரிக்கை !
படம்