தீபாவளி_என்றால்_என்ன?

 புராணம் கூறுவது யாதெனில்.


 


ஒரு காலத்தில் ஒரு அசுரன் #உலகத்தைப்_பாயாகச்_சுருட்டிக் கொண்டு போய் #கடலுக்குள் ஒளிந்து கொண்டான்.


 


தேவர்களின் முறையீட்டின்மீது மகாவிஷ்ணு_பன்றி_அவதாரம் (உரு) எடுத்துக் கடலுக்குள் புகுந்து அவனைக் கொன்று உலகத்தை மீட்டு வந்து விரித்தார்.


 


விரித்த உலகம் (பூமி) அப்பன்றியுடன் கலவி செய்ய ஆசைப்பட்டது.


 


ஆசைக்கு இணங்கி பன்றி (விஷ்ணு) பூமியுடன் கலவி செய்தது.


 


அதன் பயனாக பூமி கர்ப்பமுற்று நரகாசுரன் என்ற பிள்ளையையும் பெற்றது.


 


அந்தப் பிள்ளை தேவர்களை வருத்தினான்.


 


தேவர்களுக்காக விஷ்ணு நரகாசுரனுடன் போர் துவங்கினார்.


 


விஷ்ணுவால் அவனைக் கொல்ல முடியவில்லை. விஷ்ணுவின் மனைவி நரகாசுரனுடன் போர்தொடுத்து அவனைக் கொன்றாள்.


 


இதனால் தேவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.


 


இந்த மகிழ்ச்சி (நரகாசுரன் இறந்ததற்காக) நரகாசுரனின் இனத்தாரான திராவிட மக்கள் கொண்டாட வேண்டும்.


இதுதானே தீபாவளிப் பண்டிகையின் தத்துவம்!


 


இந்த 10 விஷயங்கள்தான் தமிழரைத் தீபாவளி கொண்டாடும்படி செய்கிறதே அல்லாமல், வேறு என்ன என்று யாருக்குத் தெரியும்? யாராவது சொன்னார்களா? 


 


இதை ஆராய்வோம். இக்கதை எழுதிய ஆரியர் களுக்குப் பூமிநூல்கூடத் தெரியவில்லை என்று தானே கருத வேண்டியிருக்கிறது.


 


பூமி தட்டையா? உருண்டையா?


 


தட்டையாகவே இருந்தபோதிலும் ஒருவனால் அதைப் பாயாகச் சுருட்ட முடியுமா? எங்கு நின்றுகொண்டு சுருட்டுவது?


சுருட்டினால் தூக்கி கட்கத்திலோ, தலைமீதோ எடுத்துப் போக முடியுமா?


 


எங்கிருந்து தூக்குவது?


 


கடலில் ஒளிந்து கொள்வதாயின், கடல் அப்போது எதன்மீது இருந்திருக்கும்?


 


அரக்கனைக் கொன்று பூமியை விரித்ததால், பூமிக்கு பன்றிமீது காதல் ஏற்படுவானேன்?


 


பூமி மனித உருவமா? மிருக உருவமா?


 


மனித உருவுக்கும், மிருக உருவுக்கும் கலவியில் மனிதப் பிள்ளை உண்டாகுமா?


 


பிறகு சண்டை ஏன்? கொல்லுவது ஏன்?


 


இதற்காக நாம் ஏன் மகிழ்ச்சி அடைய வேண்டும்?


 


இவைகளைக் கொஞ்சமாவது தீபாவளி கொண்டாடும் - தமிழ்ப் புலவர்கள், அறிஞர்கள் சிந்திக்கவேண்டாமா? நரகாசுரன் ஊர் மாகிஷ்மகி என்ற நகரம். இது நர்மதை ஆற்றின் கரையில் இருக்கிறது. மற்றொரு ஊர் பிரகித் ஜோஷா என்று சொல்லப்படுகிறது. இது வங்காளத்தில் விசாம் மகாணத்து அருகில் இருக்கிறது. இதை திராவிட அரசர்களே ஆண்டு வந்திருக்கிறார்கள்.


வங்காளத்தில் தேவர்களும், அசுரர்களும் யாராக இருந்திருக்க முடியும்? இவை ஒன்றையும் யோசிக்காமல் பார்ப்பனன் எழுதி வைத்தான் என்பதற்காகவும்,சொல் கிறான் என்பதற்காகவும் நடுஜாமத்தில் எழுந்து கொண்டு குளிப்பதும், புதுத்துணி உடுத்துவதும், பட்டாசு சுடுவதும், அந்தப் பார்ப்பனர்கள் வந்து பார்த்து கங்கா ஸ்நானம் ஆயிற்றா? என்று கேட்பதும், நாம் ஆமாம் என்று சொல்லி கும்பிட்டுக் காசு கொடுப்பதும், அவன் காசை வாங்கி இடுப்பில் சொருகிக் கொண்டு போவதும் என்றால் இதை என்னவென்று சொல்வது?


 


சிந்தியுங்கள்! தோழர்களை!


கருத்துகள்
Popular posts
லஞ்ச ஒழிப்புத்துறை தனது பாக்கெட்டில் இருப்பதாக நினைத்துக் கொண்டு திமிராக இருக்கும் ஆலங்காயம் ஸ்கீம் பி.டி.ஓ மணவாளன் ..!
படம்
அனைத்து தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி’’ - முதல்வர் ஸ்டாலின். தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை" என்று தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். தந்தையர் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை! தம் மக்கள் அவையத்து முந்தியிருக்க உழைக்கும் அனைத்துத் தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி நவில்வோம்!" என்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசின் தவறான நிர்வாகமே காரணம்” - மேற்கு வங்க விபத்து; கார்கே புதுடெல்லி: மேற்கு வங்க ரயில் விபத்துக்கு நரேந்திர மோடி அரசின் 10 ஆண்டு கால தவறான நிர்வாகமே காரணம் என்று காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. முன்னதாக இன்று காலை மேற்குவங்கத்தில் கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் ரயில் ஓட்டுநர் உள்பட 15 பேர் உயிரிழந்தனர்.மல்லிகார்ஜுன் கார்கே கண்டனம்: இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரி அருகே நிகழ்ந்த ரயில் விபத்தில் பலர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்துச் செய்தி மிகுந்த துயரத்தை ஏற்படுத்தி உள்ளது. விபத்துக் காட்சிகளைப் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பங்களை எண்ணி என் இதயம் வேதனை கொள்கிறது. இந்த துயரமான நேரத்தில், அவர்கள் ஒவ்வொருவருக்கும் எனது ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறோம். பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக முழுமையான இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.ADVERTISEMENTHinduTamil12June3 கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசு, ரயில்வே அமைச்சகத்தை மிகவும் தவறாக நிர்வகித்து வந்துள்ளது. சுய விளம்பரத்துக்கான மேடையாக, கேமராவால் இயக்கப்படும் ஒரு துறையாக திட்டமிட்ட ரீதியில் மோடி அரசு அதனை மாற்றிவிட்டது. ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக இதனை சுட்டிக்காட்டுவது எங்கள் கடமை என்று கருதுகிறோம். இந்த அப்பட்டமான யதார்த்தத்தின் மற்றொரு நினைவூட்டலாகவே இன்றைய சோகச் சம்பவம் இருக்கிறது. எங்கள் மீது குற்றம் காணாதீர்கள். நாங்கள் எங்கள் கேள்விகளை தொடர்ந்து முன்வைத்துக்கொண்டே இருப்போம். மேலும், இந்திய ரயில்வேயை கைவிட்ட குற்றத்தை இழைத்த மோடி அரசை அதற்கு பொறுப்பேற்கச் செய்வோம்" என தெரிவித்துள்ளார்.AdvertisementAdvertisementஅரசுக்கு பவன் கெரா கேள்வி: காஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் செய்தித் தொடர்பு பிரிவின் தலைவர் பவன் கெரா, ​​“இதுபோன்ற மனதை உலுக்கும் சம்பவங்களின் பட்டியல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஆனால், அரசாங்கம், அமைச்சகம் அல்லது அமைச்சர் என யாரும் எதையும் கற்றுக்கொள்ளவில்லை. விபத்து நடந்த இடத்துக்கு மத்திய ரயில்வே அமைச்சர் சென்றிருக்கிறார். அங்கிருந்து ஒரு வீடியோவை அவர் வெளியிடுவார். பின்னர் அதற்காக அவர் பாராட்டும் பெறுவார். இதுபோன்ற விபத்துக்களுக்காக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த வரலாறு எங்கள் கட்சிக்கு உண்டு. அதுபோன்ற ஒரு முன்னுதாரணத்தை படைத்தவர்கள் நாங்கள். விபத்து நடந்த இடத்துக்கு ரயில்வே அமைச்சர் செல்வது என்பது அவரது கடமை. ஆனால், இதுபோன்ற விபத்துக்கள் ஏன் அடிக்கடி நடக்கின்றன?” என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
படம்
*ரயில் விபத்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது-பிரதமர் இரங்கல்.*மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த ரயில் விபத்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல்; காயமடைந்தவர்கள் குணமடைய பிரார்த்திக்கிறேன்.விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.மேற்கு வங்க ரயில் விபத்து தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டறிந்த பின் பிரதமர் மோடி.மேற்குவங்க ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரயில்வே அமைச்சகம் சார்பில் நிவாரணம் அறிவிப்பு.உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், தீவிர காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.2.5 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணம்.
உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்க வேண்டும் : அரசுக்கு ஜனநாயக எழுச்சி கழக தலைவர் காயல் அப்பாஸ் கோரிக்கை !
படம்