காவல் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் திறன் போட்டியில்

காவல் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் திறன் போட்டியில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர், கூடுதல் ஆணையாளர் (தலைமையிடம்) மற்றும் காவல் அதிகாரிகள் பரிசுகளை வென்றனர்.சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள மருதம் வளாகத்தில் இயங்கி வரும் தமிழக காவல்துறையின் செயலாக்கம் (Operations) பிரிவின் தலைமையில் சென்னை பெருநகர காவல்துறை அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் திறன் போட்டிகள் நடைபெற்றது. இதில் சட்டம், ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து, ஆயுதப்படை, நுண்ணறிவுப்பிரிவு, மத்திய குற்றப்பிரிவு, சென்னை பாதுகாப்பு பிரிவு மற்றும் நவீன கட்டுப்பாட்டறை ஆகிய சிறப்பு பிரிவுகளில் பணிபுரியும் காவல் ஆய்வாளர்கள் முதல் உயரதிகாரிகள் மற்றும் காவல் ஆணையாளர் வரையிலான 536 காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர். பல்வேறு கட்டமாக நடைபெற்ற துப்பாக்கி சுடும்திறன் போட்டியில் 20 காவல் அதிகாரிகள் இறுதிப்போட்டிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டனர். நடைபெற்ற இறுதிப்போட்டியில் 10 அடி, 15 அடி மற்றும் 20 அடி தூரத்தில் சுடும் திறன் போட்டியில் துல்லியமாக இலக்கில் சுட்டு, சென்னை பெருநகர காவல், கூடுதல் ஆணையாளர் (தலைமையிடம்) முனைவர் ஏ.அமல்ராஜ், இ.கா.ப., அவர்கள் மற்றும் W-21 கிண்டி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.எஸ்.லஷ்மி ஆகியோர் முதல் பரிசை பகிர்ந்து கொண்டும், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு. மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்கள் 2ம் பரிசையும், சென்னை பெருநகர காவல், இணை ஆணையாளர் (கிழக்கு மண்டலம்) திரு.ஆர்.சுதாகர், அவர்கள் 3ம் பரிசையும் வென்றனர். இப்போட்டியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் நடுவர், கூடுதல் காவல் இயக்குநர் (செயலாக்கம்) முனைவர் அ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் தலைமையில், காவல்துறை கண்காணிப்பாளர் (செயலாக்கம்) திரு.ரமேஷ், திரு.ஜெயச்சந்திரன் மற்றும் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர். போட்டியின் இறுதியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.


கருத்துகள்
Popular posts
தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
படம்
சமூக வலைத்தளங்களில் பல பெண்கள் குறி வைத்து வாழ்க்கையை சீரழித்த காமுகன் சென்னையில் கைது
படம்
பணியிடங்களில் நடக்கும் பாலியல் தொல்லைச் சம்பவங்களின் தாக்கம்...” ஐகோர்ட் நீதிபதி வேதனை!
படம்
அனைத்து தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி’’ - முதல்வர் ஸ்டாலின். தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை" என்று தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். தந்தையர் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை! தம் மக்கள் அவையத்து முந்தியிருக்க உழைக்கும் அனைத்துத் தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி நவில்வோம்!" என்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழக விளையாட்டுத்துறை மந்திரி உதயநிதி ஸ்டாலின் நடித்த கண்ணை நம்பாதே திரைப்பட வெளியீட்டு விழா கோலாகலம்!
படம்