அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தினர் பொதுமக்களுக்கு முககவசம் வழங்கி தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தனர்
உலகத்தையே அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க அரசின் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதாலும் தற்போது தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு கரூர் மாவட்டம் குளித்தலை ஆண்டார் வீதியில் பொதுமக்களில் பலர் முககவசம் அணியாமல் துணி , நகை , பட்டாசு , இனிப்புகள் வாங்க சென்றதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக முககவசம் அணியாமல் சென்றவர்களுக்கு முககவசம் வழங்கியதோடு அனைவருக்கும் இனிய தீபதிருநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர். அவர்களிடம் தங்களின் குழந்தைகள் மத்தாப்பு , பட்டாசு வெடிக்கும் போது பொற்றோர்களாகிய நீங்கள் அருகிலேயே இருந்து பாதுகாப்பாக வெடிக்க நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டுமென சங்கத்தினர் கேட்டு கொண்டனர்.இந்த தீபதிருநாளில் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிந்து ,சமூக இடைவெளியினை கடைபிடித்து , கைகளை அடிக்கடி சுத்தம் செய்து கொரோனா என்னும் கொடிய வைரஸை இந்த உலகத்தை விட்டு ஒழிப்போம் என்று சபதம் ஏற்போம் என்று அனைவரையும் சங்கத்தினர் வணங்கி வேண்டி கேட்டுக் கொண்டனர்.இந்த நிகழ்வில் சங்கத்தின் தலைவர் அருள்வேலன் ஜி மற்றும் பொறுப்பாளர்கள் கருணாநிதி , அர்ச்சகர் கல்யாணவெங்கட்ராமன் , மதி , ரவி ஆகியோர் கலந்து கொண்டனர்.