வான் மண்டலம் மாசு படாமல் இந்த தீபாவளியைக் கொண்டாடுவோம்

வான் மண்டலம் மாசு படாமல் இருக்க.


 


நம் வீட்டை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கும் நம்மில் எத்தனை பேர் நாட்டை சுத்தப்படுத்த வேண்டுமென்று நினைக்கிறோம்...?


 


பத்து விழுக்காடு மட்டுமே நினைத்து பார்க்கின்றார்கள், பூமியில் வெப்பம் அதிகரித்து காணப்படுவதற்கு முக்கிய காரணம் காடுகளை அழிப்பதுதான்...


 


பூமியில் வெப்பம் அதிகமாவதால் பனிமலைகள் உருகி கடல் மட்டம் உயர்ந்து வருகிறது, வீட்டிற்கு ஒரு மரம் வளர்க்க வேண்டுமென்கிறார்கள். பூமியில் பிறந்ததற்கு ஒரு மரத்தையாவது நாம் வளர்த்து விட்டுப் போக வேண்டும்...


 


நாம் எந்த ஒரு பெரிய சாதனையையும் செய்து விட வேண்டாம். ஒரு மரத்தை நன்கு பராமரித்து வளர்த்தாலே போதும். பூமியில் குறைந்து கொண்டு வரும் உயிர் வாயு (ஆக்ஸிஜன்) அதிகரித்து விடும்...


 


வாகனங்களுக்கு வருடம் தோறும் புகைப் பரிசோதனை செய்யப்படுகிறது. சுற்றுப்புற தூய்மைக்கெல்லாம் அபராதம் போட்டால்தான் செய்வேன் என்றால் நமக்கு பின்வரும் தலைமுறையினர் உடல் குறைகளோடுதான் பிறப்பார்கள்...


 


நாம் உயிர் வாழ்வதற்கு முக்கிய ஆதாரமாக இருப்பது தண்ணீர். எப்படி தாய்பாலில் கலப்படம் செய்தால் அதற்கு பயன் இல்லையோ, அதே போல் குடி தண்ணீரில் கலப்படம் செய்தாலும் பயன்படுத்த முடியாது...


 


மூன்று விழுக்காடு தண்ணீர் இருக்கும் பூமியில் ஒரு விழுக்காடு தண்ணீர் மட்டுமே பயன்படுத்த முடிகிறது. அந்த தண்ணீரையும் மாசுபடுத்தி வருகிறோம்...


 


நதிகளை சாயப்பட்டறை மூலமாக மாசு படுத்தி விட்டோம். இருபது ஆண்டுகளுக்கு முன்பு சிறப்பாக பாய்ந்து ஓடிக்கொண்டிருந்த நதிகளை எல்லாம் இப்பொழுது பார்க்க முடிவதில்லை...


 


ஆற்றில் இருந்து மணல்களை எடுப்பதால் நிலத்தடி நீர் ஆழம் இன்னும் அதிகமாகிக் கொண்டு போகிறது. மேலும்!, தண்ணீர் தொழிற்சாலை மூலமாக பல்லாயிரக் கணக்கான அடிகள் தோண்டி நிலத்தடி நீரை எடுத்து வெளிமாநிலத்திற்கு அனுப்பி பணம் சம்பாதித்து கொண்டிருக்கிறார்கள்...


 


புவி வெப்பமயமாவதை தடுப்பதற்கு மழை நீர் சேகரிப்பு அவசியமாகிறது. ஆண்டாண்டிற்கு மழைநீர் சேகரிக்கும் குழாய்களை சரி பார்க்க வேண்டும்...


 


இன்று உலகமே காற்று மாசினால் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கின்றது . குழந்தைகளில் 20 சதவீதத்தினர் சுவாச கோளாறினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்...


 


காற்று மாசு வளிமண்டலத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தின் காரணமாக புவி வெப்பமயமாதல் துவங்கி , பனி உருகி கடல் நீர்மட்டம் உயர்வதுவரை தொடர்கின்றது இந்த சிக்கல்கள்...


 


அறிவியல் அறிஞர்களின் கூற்றுப்படி இனி வெளியிடப்படும் கார்பனின் அளவினை குறைத்தால் மட்டும் புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்திட முடியும் என்று சொல்லி இருக்கிறார்கள்...


 


எல்லாவற்றிற்கும் அரசு சட்டம் இயற்றி கட்டாயப் படுத்த வேண்டும் என நினைக்காமல் நமக்கான வாழ்வாதார சிக்கல்களை நாம்தான் சரி செய்து கொள்ள வேண்டும்...


 


அனைவரும் தெரிந்தே பூமியை மாசு படுத்துவதில்லை. தொண்ணூறு விழுக்காடு தெரியாமல்தான் புவியை மாசு படுத்தி கொண்டிருக்கிறோம்...


 


அதன் வீரியத்தையும், விளைவுகளையும் நாம் அறிந்திருக்கவில்லை. அரசாங்கம் என்ன செய்யுமென்று நினைக்காமல் நம்மால் முடிந்த வழிகளில் பூமியைப் பாதுகாப்போம்...


 


ஆம் நண்பர்களே.


 


இன்றே உறுதிமொழி எடுத்து கொள்வோம். ஆளுக்கு ஒரு மரம் நட்டு வைத்து அதனை முறையாகப் பராமரிப்போம், நம்மால் முடிந்தவரை எத்தனை மரம் வளர்க்க முடியுமோ அத்தனை மரங்கள் வளர்ப்போம்.


 


நமது வீட்டில் ஒரு குழந்தை பிறந்தால் அவர்கள் நினைவாக ஒரு மரம் நட்டு வைப்போம். இப்படி சின்னச் சின்ன செயல்கள் செய்தாலே போலும் பூமி வெப்பமயமாவதிலிருந்தும், மாசடைவதிலிருந்தும் பூமியை காப்பாற்றி விடலாம்.


 


புதிதாய் பிறக்கும் இளம் தளிர்கள் நடைபழகும் பிஞ்சு மழலைகள், இப்பூவுலகில் நம்பிக்கையுடன் பாதம் பதிக்க, இவ்வுலகில் ஒரே உயிர்க்கோளும் நமது ஒரே வீடுமான பூவுலகைப் பாதுகாப்பாக வைத்திருப்போம்.


கருத்துகள்
Popular posts
லஞ்ச ஒழிப்புத்துறை தனது பாக்கெட்டில் இருப்பதாக நினைத்துக் கொண்டு திமிராக இருக்கும் ஆலங்காயம் ஸ்கீம் பி.டி.ஓ மணவாளன் ..!
படம்
அனைத்து தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி’’ - முதல்வர் ஸ்டாலின். தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை" என்று தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். தந்தையர் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை! தம் மக்கள் அவையத்து முந்தியிருக்க உழைக்கும் அனைத்துத் தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி நவில்வோம்!" என்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசின் தவறான நிர்வாகமே காரணம்” - மேற்கு வங்க விபத்து; கார்கே புதுடெல்லி: மேற்கு வங்க ரயில் விபத்துக்கு நரேந்திர மோடி அரசின் 10 ஆண்டு கால தவறான நிர்வாகமே காரணம் என்று காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. முன்னதாக இன்று காலை மேற்குவங்கத்தில் கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் ரயில் ஓட்டுநர் உள்பட 15 பேர் உயிரிழந்தனர்.மல்லிகார்ஜுன் கார்கே கண்டனம்: இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரி அருகே நிகழ்ந்த ரயில் விபத்தில் பலர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்துச் செய்தி மிகுந்த துயரத்தை ஏற்படுத்தி உள்ளது. விபத்துக் காட்சிகளைப் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பங்களை எண்ணி என் இதயம் வேதனை கொள்கிறது. இந்த துயரமான நேரத்தில், அவர்கள் ஒவ்வொருவருக்கும் எனது ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறோம். பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக முழுமையான இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.ADVERTISEMENTHinduTamil12June3 கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசு, ரயில்வே அமைச்சகத்தை மிகவும் தவறாக நிர்வகித்து வந்துள்ளது. சுய விளம்பரத்துக்கான மேடையாக, கேமராவால் இயக்கப்படும் ஒரு துறையாக திட்டமிட்ட ரீதியில் மோடி அரசு அதனை மாற்றிவிட்டது. ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக இதனை சுட்டிக்காட்டுவது எங்கள் கடமை என்று கருதுகிறோம். இந்த அப்பட்டமான யதார்த்தத்தின் மற்றொரு நினைவூட்டலாகவே இன்றைய சோகச் சம்பவம் இருக்கிறது. எங்கள் மீது குற்றம் காணாதீர்கள். நாங்கள் எங்கள் கேள்விகளை தொடர்ந்து முன்வைத்துக்கொண்டே இருப்போம். மேலும், இந்திய ரயில்வேயை கைவிட்ட குற்றத்தை இழைத்த மோடி அரசை அதற்கு பொறுப்பேற்கச் செய்வோம்" என தெரிவித்துள்ளார்.AdvertisementAdvertisementஅரசுக்கு பவன் கெரா கேள்வி: காஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் செய்தித் தொடர்பு பிரிவின் தலைவர் பவன் கெரா, ​​“இதுபோன்ற மனதை உலுக்கும் சம்பவங்களின் பட்டியல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஆனால், அரசாங்கம், அமைச்சகம் அல்லது அமைச்சர் என யாரும் எதையும் கற்றுக்கொள்ளவில்லை. விபத்து நடந்த இடத்துக்கு மத்திய ரயில்வே அமைச்சர் சென்றிருக்கிறார். அங்கிருந்து ஒரு வீடியோவை அவர் வெளியிடுவார். பின்னர் அதற்காக அவர் பாராட்டும் பெறுவார். இதுபோன்ற விபத்துக்களுக்காக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த வரலாறு எங்கள் கட்சிக்கு உண்டு. அதுபோன்ற ஒரு முன்னுதாரணத்தை படைத்தவர்கள் நாங்கள். விபத்து நடந்த இடத்துக்கு ரயில்வே அமைச்சர் செல்வது என்பது அவரது கடமை. ஆனால், இதுபோன்ற விபத்துக்கள் ஏன் அடிக்கடி நடக்கின்றன?” என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
படம்
*ரயில் விபத்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது-பிரதமர் இரங்கல்.*மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த ரயில் விபத்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல்; காயமடைந்தவர்கள் குணமடைய பிரார்த்திக்கிறேன்.விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.மேற்கு வங்க ரயில் விபத்து தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டறிந்த பின் பிரதமர் மோடி.மேற்குவங்க ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரயில்வே அமைச்சகம் சார்பில் நிவாரணம் அறிவிப்பு.உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், தீவிர காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.2.5 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணம்.
உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்க வேண்டும் : அரசுக்கு ஜனநாயக எழுச்சி கழக தலைவர் காயல் அப்பாஸ் கோரிக்கை !
படம்