பாதுகாப்பான தீபாவளி கொண்டாடுவது எப்படி ? மாணவர்கள் இணையம் வாயிலாக விழிப்புணர்வு
விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு
மாணவர்களுக்கு ஓவியம்,பேச்சு,கவிதை போட்டிகளை ஆன்லைன் மூலமாக நடத்திய பள்ளி
கையில் வெடி விழுந்தால் கையை தண்ணீருக்குள் விடுங்கள்
ஒரு வாளி மணலும்,தண்ணீரும் வெடிக்கும்போது அருகில் இருந்தால் விபத்தை தவிர்க்கலாம்
தேவகோட்டை: தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பாதுகாப்பான தீபாவளி கொண்டாடுவது எப்படி? என மாணவர்களுக்கு ஓவியம்,பேச்சு ,கவிதை போட்டிள் ஆன்லைன் மூலம் போட்டிகள் நடத்தப்பட்டது.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் தீபாவளியை முன்னிட்டு ஆண்டுதோறும் பாதுகாப்பான தீபாவளி கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெறும்.கொரோனாவால் மாணவர்கள் வீட்டிலேயே முடங்கி கிடப்பதை கருத்தில் கொண்டு வீட்டிலேயே ஓவியம் வரைய சொல்லியும்,கவிதை மற்றும் பேச்சு போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களை ஆன்லைன் வழியாக வீடியோவாக அனுப்ப சொல்லி பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் ஸ்ரீதர்,முத்துமீனாள் ,செல்வமீனாள் ,முத்துலெட்சுமி ஆகியோர் அலைபேசி மூலம் மாணவர்களை தொடர்பு கொண்டு ஊக்குவித்தனர். மாணவர்கள் தொடர்ந்து வீட்டில் இருந்தபடியே இது போன்ற போட்டிகளில் பங்கேற்க செய்வது அவர்களது உடல்நலம் மற்றும் மனநலத்துக்கு உதவுவது ஆகும் . ஓவியம்,கவிதை,பேச்சு போட்டிகளில் பங்கேற்ற மாணவர்கள் திவ்ய ஸ்ரீ,கீர்த்தியா,ஹரிப்பிரியா,ஈஸ்வரன்,ஹரிஹரசுதன் ,ஹேமலதா
கனிஷ்கா,தேவதர்ஷினி,ராஜேஸ்வரி,திவ்யா,ஜெயஸ்ரீ, அம்முஸ்ரீ,
ஸ்வேதா,பிரஜித், ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.மாணவர்கள் பட்டாசு வெடிக்கும் போது தீ விபத்து ஏற்பட்டால் எப்படி தீயை அணைக்க வேண்டும்? எப்படி பட்டாசு பாதுகாப்பாக வெடிக்க வேண்டும் , மீட்புப்பணிகள் பற்றி தங்களுக்கு தெரிந்த கருத்துக்களை இணையம் வழியாக வெளிப்படுத்தினார்கள்.இப்பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாட வகுப்புகளும், பல்வேறு மத்திய,மாநில அரசுகள் நடத்தும் ஆன்லைன் போட்டிகளில் மாணவர்களை பங்கேற்க வைப்பதும் , சதுரங்க பயிற்சிகள் நடைபெற்று வருவதும் ஊரடங்கு காலத்தில் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கும் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது என்று பெற்றோர்கள் தெரிவித்தனர்.