வாணியம்பாடி நியாய விலை கடை இடமாற்றத்தை கண்டித்து சாலை மறியல் வாணியம்பாடி ஆலங்காயம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நேதாஜி நகர் வடக்கு பகுதியில் கற்பகம் கடை எண்:10 செயல்பட்டு வருகிறது இதில் நகராட்சி 29 மற்றும் 30 ஆவது வார்டு பகுதி ரேஷன் அட்டைதாரர்கள் பொருட்கள் வாங்கி வருகின்றனர் இந்த கடையில் மொத்தம் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகள் இருப்பதால் பொருட்கள் வாங்க சிரமம் ஏற்படுகிறது என்று கோரிக்கை வைத்தனர் கோரிக்கையை ஏற்று நேதாஜி நகர் கிழக்கு பகுதியில் நேற்று முன்தினம் புதிதாக கட்டப்பட்டுள்ள ரேஷன் கடையை திறந்து வைத்தனர் இந்நிலையில் 30 ஆவது வார்டு பகுதியில் இயங்கிவரும் ரேஷன் கடையை காலி செய்து புதிதாக திறக்கப்பட்டுள்ள கடைக்கு இடமாற்றம் செய்யப்படுவதாகவும் வந்த தகவலின் அடிப்படையில் பகுதி மக்கள் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் வெகுநேரமாகியும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை யாரும் வராததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் வாணியம்பாடி ஆலங்காயம் சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வட்டாட்சியர் சிவப்பிரகாசம் மற்றும் வாணியம்பாடி துணை கண்காணிப்பாளர் பழனி செல்வம் ஆகியோர் பொதுமக்கள் இடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் பின்னர் விரைவில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்ததின் பேரில் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்