புனித தோமையர்மலை மாவட்ட காவல்துறையினர் ஆதம்பாக்கத்தில் இயங்கி வரும் குழந்தைகள் ஆதரவு இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு புத்தாடைகள், இனிப்பு மற்றும் பட்டாசுகள் வழங்கி , தீபாவளி வாழ்த்துக்களை பகிர்ந்தனர்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்களின் வழிகாட்டுதலின்படி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, புனித தோமையர்மலை காவல் மாவட்டம், S - 8 ஆதம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஏரிக்கரை தெருவில் இயங்கி வரும் “வள்ளலார் காப்பகம்” என்ற குழந்தைகள் ஆதரவு இல்லத்திற்கு, புனித தோமையர்மலை துணை ஆணையாளர் முனைவர் கே.பிரபாகரன் அவர்கள், S-8 ஆதம்பாக்கம் காவல் ஆய்வாளர் திரு.பாலன் மற்றும் காவல் குழுவினருடன் சென்று, அங்குள்ள 30 குழந்தைகளுக்கு புத்தாடைகள், இனிப்பு மற்றும் பட்டாசுகள் வழங்கியும், தீபாவளி வாழ்த்துக்களை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்தனர். தீபாவளி பரிசுகளை பெற்றுக் கொண்ட குழந்தைகள் முக மலர்ச்சியுடன் காவல் குழுவினருக்கு நன்றி தெரிவித்து மகிழ்ந்தனர்.