வேலூர் மாவட்டம் காட்பாடியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்
வேலூர் மண்டல மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய விற்பனையாளர், கட்டுநர் சான்றிதழ் சரிபார்ப்பு நேர்காணல்
வேலூர் மண்டல மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின் சார்பில் கூட்டுறவு துறையில் நியாய விலைக்கடைகளில் காலியாக உள்ள கட்டுநர் மற்றும் விற்பனையாளர் பணியிடத்திற்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் நிகழ்வு நிறைவுபெற்றது.
காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு கூட்டுறவு துணை பதிவாளர் மற்றும் டான்பெட் மண்டல மேலாளர் ஜி.மகாலிங்கம் மேற்பார்வையில் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் மற்றும் நேர்காணல் அலுவலர் செ.நா.ஜனார்த்தனன் முன்னிலையில் நவம்பர் 2ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 4.30 மணிவரை ஒரு குழுவினருக்கு ஒரு நாளைக்கு 50 பேர் வீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டு மொத்தம் 525பேர் கட்டுநர் பணிக்கும் 1966 பேர் விற்பனையாளர் பணிக்கும் விண்ணப்பித்திருந்தனர் அவர்களில் வருகை தந்த விண்ணப்பத்தாரர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் நடைபெற்றது.
நேர்காணலுக்கு வருகை தந்த அனைவரும் சமூக இடைவெளியில் முக கவசம் அணிந்து வருகை தந்தனர். வருகை தந்த அனைவருக்கும் தெர்மல் ஸ்கேனர் மூலம் டெஸ்ட் செய்யப்பட்டனர். மேலும் கை சுத்திகரிப்பான் கொண்டு சுத்தம் செய்துக்கொண்டு உள்ளே அனுமதிக்கப்பட்டனர். மேலும் அனைரும் கையுரைகளை அணிந்திருந்தனர்.
வரவேற்பு குழு, நேர்காணலுக்கு வருபவர்களை வரிசை படுத்தும் குழு, கிருமிநாசினி தெளிக்கும் குழு, சான்றிதழ் சரிபார்ப்பு குழு, நேர்காணல் குழு, பள்ளியை தூய்மை செய்யும் குழு, ஆகிய குழுக்கள் நியமிக்கப்பட்டு பணிபுரிந்னர்.
குழுவின் தலைவராக கூட்டுறவு துணை பதிவாளர் மற்றும் டான்பெட் மண்டல மேலாளர் ஜி.மகாலிங்கம் காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியை கோ.சரளா, உதவி தலைமை ஆசிரியர் நேர்காணல் அலுவலர் செ.நா.ஜனார்த்தனன் கூட்டுறவு சார் பதிவாளர்கள் சந்திரன், அமுதா, எஸ்.கவிதா முதுநிலை ஆய்வாளர்கள் கார்த்திக், தம்பி, காட்பாடி கூட்டுறவு சங்க செயலாளர் பாபு, நேர்காணல் குழுவில் உள்ள கூட்டுறவுத்துறை அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள், கூட்டுறவு சார்பதிவாளர்கள்(ஓய்வு) தொடக்க வேளாண்மை கூட்டுறவு பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மேலும் பள்ளிவளாகத்தில் வேலூர் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் தூய்மை செய்தனர்.
காட்பாடியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வேலூர் மண்டல மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின் சார்பில் கூட்டுறவு துறையில் நியாய விலைக்கடைகளில் காலியாக உள்ள கட்டுநர் மற்றும் விற்பனையாளர் பணியிடத்திற்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் நிகழ்வில் பங்கேற்க வருகை தந்த விண்ணப்பத்தாரர்களிடையே கூட்டுறவு துணை பதிவாளர் மற்றும் டான்பெட் மண்டல மேலாளர் ஜி.மகாலிங்கம் பேசியபோது எடுத்தப்படம். உடன் காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் நேர்காணல் அலுவலர் செ.நா.ஜனார்த்தனன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது