தமிழகம் முழுவதும் தீபாவளியை முன்னிட்டு 469.79 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. 13 மற்றும் 14-ம் தேதிகளில் சென்னை மண்டலத்தில் ரூ.94.36 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் இரண்டு நாட்களில் ரூ.103.82 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை மட்டும் ரூ.227.88 கோடிக்கு மதுபானங்கள் விற்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.