லஞ்சப் பணம் வாங்குபவர்களுக்கு வெளிநாடுகளில் வழங்கப்படும் தண்டனை விவரங்கள்

இந்தியாவில் மட்டுமல்ல உலக அளவிலும் லஞ்சம் தலை விரித்து ஆடுகிறது


 


நம் நாட்டில் மிக பெரிய பிரச்சனைகளுள் ஒன்று லஞ்சம். அரசு அலுவலக பியுனில் தொடங்கி ஐ.ஏ.எஸ் அதிகாரி வரை அனைத்து துறைகளிலும் லஞ்சம் தலை விரித்து ஆடுகிறது. ஆனால், பொதுவாக நாம் அரசியல்வாதிகளை மட்டுமே குற்றம் சொல்லுவோம்.


 


 லஞ்சம் வாங்குபவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கினால், லஞ்சத்தை ஒழிக்கலாம் என்பது பலரது வாதமாக இருக்கிறது.


 


லஞ்சத்திற்கு எந்தெந்த நாடுகள் என்ன விதமான தண்டணையை தருகின்றன தெரியுமா?


 


ஐஸ்லாந்து (ஊழல் குறைவான நாடுகளில் முதலிடம்):


இங்கு தண்டனை என்னவோ 2 வருட சிறைச்சாலை தான். அதற்கு முன்பு லஞ்சம் வாங்கிச் சேர்த்த பணம் முழுவதும் பறிமுதல் செய்யப்படும்.


 


எகிப்து:


இங்கு லஞ்சம் வாங்குவது கிரிமினல் குற்றம். நிரூபிக்கப்பட்டால் ஆயுள் முழுவதும் சிறை தான். அதுவும் உள்ளே கடுமையான வேலைகளைச் செய்ய வேண்டும்.


 


அர்ஜெண்டினா:


லஞ்சம் வாங்கினால் சிறை தண்டனையோடு வேலையும் பறிபோய்விடும். விடுதலையான பிறகும் சாகும் வரை வேறு வேலை தரமாட்டார்கள்.


 


செக் குடியரசு:


சிறை தண்டனை, வேலை பறிப்பு, வீடு மற்றும் பிற சொத்துக்கள் பறிக்கப்படும்.


 


நைஜீரியா : 


இங்கு தண்டனை கொஞ்சம் வித்தியாசமானது. லஞ்சம் பெற்றது உறுதியானால் அரசியல் மற்றும் குடி உரிமைகள் பறிக்கப்படும்.


 


இங்கிலாந்து:


சிறை தண்டனையுடன் வாக்களிக்கும் உரிமையும் ரத்து செய்யப்படும்.


 


சீனா :


கீழ்மட்ட அரசாங்க அலுவலர்களுக்கு சிறை தண்டனை. உயர் பொறுப்பில் இருப்பவர்களுக்கு மரண தண்டனையும் உண்டு. 


விஷ ஊசி போட்டு நொடிகளில் சாகடித்து விடுவார்கள். முன்பெல்லாம் துப்பாக்கியால் நெற்றியில் சுட்டுச் சாகடிப்பார்கள். துப்பாக்கி குண்டுக்கான செலவு உறவினர்களிடம் வசூலிக்கப்படும். 


 


இதெல்லாம் இருக்கட்டும், இந்தியாவில் லஞ்சம் வாங்கினால் என்ன தண்டனை தெரியுமா?


அரசு அதிகாரி லஞ்சம் வாங்கினால், அதிகபட்சம் ஒரு வருடம் வரை சிறை தண்டனை. அல்லது அபராதம். அல்லது இரண்டுமே! 


உணவு, மது, பொழுதுபோக்கு போன்றவற்றை லஞ்சமாக.... மன்னிக்கவும் அன்பளிப்பாக வாங்கினால் அபராதம் மட்டுமே.


கருத்துகள்
Popular posts
தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
படம்
சமூக வலைத்தளங்களில் பல பெண்கள் குறி வைத்து வாழ்க்கையை சீரழித்த காமுகன் சென்னையில் கைது
படம்
பணியிடங்களில் நடக்கும் பாலியல் தொல்லைச் சம்பவங்களின் தாக்கம்...” ஐகோர்ட் நீதிபதி வேதனை!
படம்
அனைத்து தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி’’ - முதல்வர் ஸ்டாலின். தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை" என்று தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். தந்தையர் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை! தம் மக்கள் அவையத்து முந்தியிருக்க உழைக்கும் அனைத்துத் தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி நவில்வோம்!" என்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழக விளையாட்டுத்துறை மந்திரி உதயநிதி ஸ்டாலின் நடித்த கண்ணை நம்பாதே திரைப்பட வெளியீட்டு விழா கோலாகலம்!
படம்