- இந்தியாவின் தேசிய திருவிழாவான 74 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா திருப்பத்தூர் கோட்டை லயன்ஸ் சங்கத்தின் சார்பில் திருப்பத்தூர் அடுத்த ப .முத்தம்பட்டி கிராமத்தில் உள்ள அக்க்ஷதா அகர்பத்தி நிறுவனத்தில் கொண்டாடப்பட்டது . இந்த நிகழ்ச்சிக்கு தலைவர் டி .பி விஜயகுமார் தலைமை வகித்து தேசிய கொடியை ஏற்றினர் . உடன் நிறுவனத்தின் இயக்குனர் எஸ் .பாபு வரவேற்று பேசினார் வட்டார தலைவர் லயன் ரத்தினம் மாவட்டத் தலைவர்கள் .எஸ் .கோபிநாத் ,த .நடராஜன் ,சாசன தலைவர் எஸ் .வி .ராஜேஷ் பொருளாளர் எஸ் சாந்திபூஷண் , திட்ட இயக்குனர்கள் டி எஸ் தமோதிரன் ,டி ரமேஷ் எ செந்தில்குமார் ,எஸ் சி ராஜ்குமார்,பி.யாரோசிவா ,டி .கே .வெங்கடேஷ் உள்ளிட்ட லயன் உறுப்பினர்கள் கலந்துக் கொண்டனர் முடிவில் செயலாளர் வி விபுல் ஜடேஜா நன்றி கூறினார் ,தொடர்ந்து நிறுவன ஊழியர்களுக்கு இனிப்பு மற்றும் முகக்கவசம் வழங்கப்பட்டது
திருப்பத்தூர் கோட்டை லயன்ஸ் சங்கத்தின் சார்பில் சுதந்திர தின விழா நடந்தது