திருப்பத்தூர் மாவட்டம் பாச்சல் பகுதியில் அமைந்துள்ள ஆயுத படை மைதானத்தில் 74 ஆம் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது . மாவட்ட ஆட்சியர் எம் பி சிவனருள் தேசிய கொடியை ஏற்றினர் . இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொ .விஜகுமார் உள்ளிட்ட அரசு துறை அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர் . தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது .இது திருப்பத்தூர் மாவட்டம் உதயமாகி முதல் சுதந்திர தின விழா என்பது குறிப்பிட தக்கது