காட்பாடி நாராயணி தனியார் திருமண மண்டபத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக 21 நாட்கள் ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தினால் பொதுமக்களுக்கு கொரோனா தொற்று நோய் பராவாமல் தடுக்க வருவாய்துறையும், காவல்துறையும், ரெட்கிராஸ் சங்கமும் இணைந்து தன்னார்வ தொண்டர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் காட்பாடியில் வேலூர் துணை ஆட்சியர் காமராஜ் தலைமையில் நடைபெற்றது அப்போது அவர் பேசியதாவது.. தன்னார்வ தொண்டர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனைவரும் தங்கள் பகுதியில் சமூக இடைவெளியினை அனைத்து நிலைகளில் பின்பற்ற ஆலோசனை வழங்கவும், தாங்கள் வசிக்கும் பகுதியில் நோய் தொற்று பாரவாமல் தடுக்க அரசின் அனைத்து முயற்சிகளையும் மக்களிடம் கொண்ட செல்ல வேண்டும். தங்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் தொடர்பு கொண்டு காவல் துறையுடன் இணைந்து செயலாற்ற வேண்டும். தற்போது அளிக்கப்பட்ட அடையாள அட்டையினை தவாறக பயன்படுத்தக்கூடாது என்றார். காட்பாடி வட்டாட்சியர் பாலமுருகன், காட்பாடி காவல் துணை கண்காணிப்பாளர் துரைபாண்டியன், காட்பாடி 1வது மண்டல மாநகராட்சி துணை ஆணையர் செந்தில், ரெட்கிராஸ் செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர் மண்டல துணை வட்டாட்சியர் முரளிதரன், வருவாய் ஆய்வாளர்கள் செந்தாமரை, சிவகுமார், தாராபடவேடு கிராம நிர்வாக அலுவலர் கோபி, மற்ற பகுதி கிராம நிர்வாக அலுவலர்களும் தலையாரிகள் பங்கேற்றனர். மாவட்ட ஆட்சியர் அவர்களின் அழைப்பின்பேரில் இணைய தளம் வழியாக தன்னார்வ தொண்டு செய்ய விண்ணப்பித்தவர்களின் விவரங்கள் கிராம நிர்வாக அலுவலர்களால் சரி பார்க்கப்பட்ட 102 தன்னார்வ தொண்டர்களுக்கு அடையாள அட்டைகளை துணை ஆட்சியர் காமராஜ் வழங்கினார் உடன். இந்தியன் ரெட்கிராஸ் பொருளாளர் வி.பழனி, துணைத்தலைவர் ஆர்.சீனிவாசன், ஜுனியர் ரெட்கிராஸ் அமைப்பின் அமைப்பாளர் செ.நா.ஜனார்த்தனன், பாரத சாரண சாரணீய இயக்கத்தின் தலைமைநிலைய ஆணையர் எஸ்.எஸ்.சிவவடிவு, தேசிய மாணவர் படையின் அலுவலர் சீனிவாசன் மேனிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஜெய்சங்கர், உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். துண்டறிக்கை வெளியீடு இந்தியன் ரெட் கிராஸ் தமிழ்நாடு கிளையும், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள விழிப்புணர்வு துண்டறிக்கையினை வேலூர் துணை ஆட்சியர் காமாராஜ் வெளியிட்டார்.முடிவில் தனிவட்டாட்சியர் குணசீலன் நன்றி கூறினார்.ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் சமூக இடைவெளி விட்டு அமரவைக்கப்பட்டனர். வருகை தந்த அனைவரும் கைகழுவும் திரவம் கொண்டு கைகளை சுத்தம் செய்து கொண்டனர். பங்கேற்ற அனைவரும் முககவசம் வழங்கப்பட்டது படவிளக்கம் கொரோனா தொற்று நோய் பராவாமல் தடுக்க வருவாய்துறையும், காவல்துறையும், ரெட்கிராஸ் சங்கமும் இணைந்து தன்னார்வ தொண்டர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் காட்பாடியில் உள்ள நாராயணி திருமண மண்டபத்தில் நடைபெற்றது வேலூர் துணை ஆட்சியர் காமராஜ் தலைமையில் நடைபெற்ற போது எடுத்தப்படம் உடன் வட்டாட்சியர் பாலமுருகன், காவல் துணை கண்காணிப்பாளர் துரைபாண்டியன், துணைவட்டாசியர் குணசீலன் ரெட்கிராஸ் செயலாளர் செ.நா.ஜனார்த்தனன், ஆகியோர். கொரோனா தொற்று நோய் பராவாமல் தடுக்க வருவாய்துறையும், காவல்துறையும், ரெட்கிராஸ் சங்கமும் இணைந்து தன்னார்வ தொண்டர்களுக்கான காட்பாடியில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் வேலூர் துணை ஆட்சியர் காமராஜ் நோய் தடுப்பு விழிப்புணர்வு துண்டறிக்கையினை வழங்கியபோது எடுத்தப்படம் உடன் வட்டாட்சியர் பாலமுருகன், காவல் துணை கண்காணிப்பாளர் துரைபாண்டியன், துணை வட்டாசியர் குணசீலன் ரெட்கிராஸ் செயலாளர் செ.நா.ஜனார்த்தனன், பொருளாளர் வி.பழனி, ஆகியோர். கலந்து கலந்துக். கொண்டனர்