வேலூர் தி ஹோப் ஹவுஸ் அமைப்பின் சார்பாக ஏழை எளிய மக்களுக்கு உணவு பொருட்கள்
ஏழை எளிய மக்களுக்கு நாடு முழுதும் கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு பரவிவரும் நிலையில் ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்யும் நோக்கில் சில தன்னார்வலர்கள் அமைப்புகள் சேவைகள் செய்து வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக இந்த வேலூர் தி ஹோப் ஹவுஸ் அமைப்பின் சார்பாகவும் கலவை பகுதியில் உள்ள கிராமங் களில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டன மேலும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு 144 தடை உத்தரவு போடப்பட்டு பொதுமக்கள் அத்தியா வாசி பொருள் இன்றி தவித்து வரும் ஏழை எளிய மக்களுக்கு தி ஹோப் ஹவுஸ் குழந்தைகள் நல அமைப்பு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப் பட்டன. குடும்ப அட்டை இல்லாத ஏழை எளிய பொது மக்களுக்கு இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா வட்டத்தில், மணிபட்டு, செட்டிதாங்கல், தாங்கல், நரசிங்கபுரம், கூரம்பாடி, சம்பசிவபுரம், கீழ்குப்பம், கீழ்மின்னல், வன்னிவேடு, பூண்டி, கடப்பேரி, மற்றும் அனந்தலை, ஆகிய கிராமத்தை சேர்ந்த எழை எளிய மக்களுக்கு வேலூர் தி ஹோப் ஹவுஸ் அமைப்பின் சார்பாக உணவு பொருட்கள் உணவு பொருட்கள் ஒர் குடும்பத்திற்கு 10, அரிசி, சமையல் எண்ணெய் ஒரு லிட்டர், முட்டை ஒரு டசன், துவரம் பருப்பு இரண்டு கிலோ, உப்பு ஒரு கிலோ, சக்கரை ஒரு கிலோ மிளகாய்த்தூள் 100 கிராம் சோப்பு பூஸ்ட் ஹார்லிக்ஸ் ஆகியவைகள் வழங்கப்பட்டன. இதில் வாலாஜா வட்டாட்சியர் ரவி துணை வட்டாட்சியர்கள் வருவாய் ஆய்வாளர் சுரேஷ் கிராம நிர்வாக அலுவலர்கள் கிராம நிர்வாக தலையாரி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்று இருந்தனர். ஏராளமான கிராம மக்கள் இதன் மூலம் கிராம மக்கள் பயன் அடைந்தார்கள்.