தின உரிமை மக்கள் இயக்கம் சார்பில் ஏழை எளிய மக்களுக்கு உணவு இமான் அண்ணாச்சி வழங்கினார்
தின உரிமை மக்கள் இயக்கம் சார்பில் ஏழை எளிய மக்களுக்கு உணவு மற்றும் கை கிளவுஸ் முக்க கவசம் போன்ற உப கரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. | இதன் ஒரு பகுதியாக சென்னை சூளைமேட்டில் உள்ள மூன்றாம் பாலினத்தை அவர்களுக்கு மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டு, தின உரிமை மக்கள் இயக்கம் தலைவர் டாக்டர் பி. கல்பனா அவர் களின் தலைமையில் சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள 200க்கும் மேற்பட்ட மூன்றாம் பாலினத்தவர்களுக்கு மதிய உணவு அளிக்கப்பட்டது. இந்த உணவை தினமும் 19 நாட்களாக பாதிக்கப்பட்ட வர்களுக்கு உணவு அளித்து வரும் திரைப்பட காமெடி நடிகரும் சமூக சேவகரும் இமான் அண்ணாச்சி அவர்கள் அமைப்பின் சார்பாக வழங்கப்பட்டன. உடன் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் திரு. டாக்டர் கே, சத்தியகுமார் அவர்கள் நன்றியை தெரிவித்தார் மேலும் இதற்கு பரிந்துரை செய்த கஸ்டோம்ஸ் ஆபீசர் வெங்கடேசன், மற்றும் திண்டுக்கல் சரவணன், சமூக சேவகர் மாணிக்கம், ஏற்பாட்டாளர் உதவி செய்த கழக நிர்வாகிகள் திரு அசாருதீன், சென்னை மாவட்ட இணைப்பாளர் திரு கணேஷ், ஆகியோர் பங்கேற்று சிறப்பான ஏற்பாடு செய்து அதற்கு தலைவர் டாக்டர் கல்பனா அவர்கள் நன்றியினை தெரிவித்தார் இதில் ஏராள மான மூன்றாம் பாலினத்தவர் பங்கேற்று பயனடைந்தனர்.