கூடலூர் அருகே, வீட்டின் ஜன்னலை காட்டு யானை சேதப்படுத்திய சம்பவத்தில், டான் டீ தொழிலாளி காயமின்றி உயிர் தப்பினார்; அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள் ளனர். கூடலூர் பாண்டியார் டான்டீ பகுதியை (அரசு தேயிலை தோட்ட கழகம்)ஒட்டிய குண்டம்புழா வனப்பகுதியில் , முகாமிட்டுள்ள இரண்டு காட்டு யானைகள், இரவில், குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்தி வருகின்றன. இந்த யானைகள், கடந்த வாரம் பாலமேட்டில் சிவராமன் என்பவர் வீட்டின் சமையல றையை சேதப்படுத்தியது. பாண்டியார் டான்டீ சரகம் எண் 2 தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் முகாமிட்ட யானைகளை, வனத்துறையினர் அடர்ந்த காட்டுக்குள் விரட்டினர். இந்நிலையில் , , அதிகாலை, 4:00 மணிக்கு மீண்டும் அப்பகுதியில் நுழைந்த அந்த யானைகள், பாலா என்பவர் வீட்டின் ஜன்னலை சேதப்படுத்தி, அவர் படுத்திருந்த கட்டிலின் மீது தள்ளியது. அவர் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினார். அப்பகுதியில் சப்தமிட்டு யானையை விரட்டினர். இச்சம்பவத்தால் தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர். தொழிலாளர்கள் கூறுகையில், 'கடந்த ஒருவாரமாக இப்பகுதியில் முகாமிட்டு, மக்களை அச்சுறுத்தி வரும் யானைகளிட மிருந்து நிரந்தரமான பாதுகாப்பு கிடைக்க, வனத்துறையும், டான்டீ நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.