ஆரணியின் மனிதநேயமிக்க தாசில்தார்: குவியும் பாராட்டுக்கள்
ஆரணி அடுத்த விளை சித்தேரி சார்ந்த கோமதி இவர் சென்னையில் உள்ள கல்லூரியில் பி.ஏ தமிழ் மூன்றாம் ஆண்டு கல்லூரியின் விடுதியில் தங்கி படித்து வந்தார். மேலும் ஆரணியை சேர்ந்த இரண்டு மாணவிகள் இவருடன் படித்து வந்தார்கள். கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் காரில் இவர்களை அழைத்து வந்து ஆரணி பழைய பேருந்து நிலையத்தில் ' | விட்டு சென்றனர். மற்ற இரண்டு மாணவிகள் ஆரணியில் உட்பகுதியை சார்ந்தவர்கள் இவர்களை அவரது பெற்றோர் இரண்டு சக்கர வாகனம் மூலம் வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டனர். ஆனால் கோமதி என்ற மாணவி ஆரணி அடுத்த சித்தேரி கிராமத்தை சார்ந்தவர் தற்போது ஊரடங்கு உத்தரவால் போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தால் அவரது தாயார் மஞ்சுளா தன் மகளை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு நடந்தே சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக ரோந்து பணியில் வந்த | தாசில்தார் அவர்களைப் பார்த்து எங்கு செல்கிறீர்கள் விசாரித்துள்ளார். அவர்கள் நடந்த விவரத்தை கூறியுள்ளனர் . உடனே தாசில்தார் நீங்கள் வாருங்கள் நான் உங்களை வீட்டில் விட்டு விடுகிறேன் என்று கூறி | | அழைத்துச் சென்று வீட்டில் பாதுகாப்பாக விட்டுள்ளார் | | . இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே ஒருவித | நிகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. (கோமதி பார்வையற்றவர் | என்பது குறிப்பிடத்தக்கது.)