வேலம்மாள் பள்ளி மாணவி கராத்தே போட்டியில் தங்கம் வென்று சாதனை!
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள கொட்லா விஜய்பாஸ்கர் ரெட்டி உள்விளையாட்டு அரங்கத்தில் சமீபத்தில் நடைபெற்ற தனிநபர் குமிட் சாம்பியன் ஷிப் போட்டியில், சென்னை - மேல் அயனம்பாக்கம் வேலம்மாள் வித்யாலயா பள்ளியின் 12ஆம் வகுப்பு மாணவி டி.மீனலட்சுமி, இலங்கையைச் சேர்ந்த மாணவியை எதிர்த்து 5க்கு 3 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தங்கம் வென்றார்.
சர்வதேச அளவில் நடைபெற்ற இப்போட்டியை ஷுபுகாய் ஷிட்டோ - KYU கராத்தே கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. இதில் பல்வேறு நாட்டைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பங்கேற்றனர்.
மாணவி டி.மீனலட்சுமியின் வியக்கத்தக்க சாதனையைப் பள்ளி நிர்வாகம் பாராட்டி வாழ்த்துகிறது