ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று காரண மாக 144தடை அமலில் உள்ளது. இதனால் அரசு அறிவித்தப்படி காற்கறி மளிகை கடைகள் நேரம் ஒதுக்கி விற்பனை செய்து வந்தனர். இந்நிலையில் ராணிப் பேட்டை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் கொடுக்கப் பட்டுள்ளது. இதில் வாலாஜாவில் மட்டும் 4 பேர் கொரோனா பாதித்தவர்கள் உள்ளனர். இதனால் அவர்கள் இருந்த பகுதியை லாக்டவுன் செய்யப்பட்டது. வாலாஜா நகரம் பஸ் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த காற்கறி கடைகள் மளிகை கடைகள் அடைக்கப் பட்டனன. மாவட்ட நிர்வாகம் நோய்த் தடுப்பு நடவடிக்கை களின் ஒரு பகுதியாக வீடுகளுக்கு மளிகைப் பொருள்களை வழங்க வழிவகை செய்யும் DeliverMe என்ற செல்போன் ஆப் ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஆப் மூலம் வீடு களுக்கு கொண்டு வந்து கொடுக்க பதிவு செய்து கொண்டுள்ள மளிகைகடை உரிமையாளர்கள் விபரங் களும் அவர்கள் கடை களில் உள்ள பொருள்களின் விவரங்களும் இணைய தளத்தில் கிடைக்கும். ஆண்ட்ராய்ட் செல்போன் வைத்துள்ள அனைவரும் இந்த ஆப் இலவசமாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். உணவு வகைகளை இணையதளத்தில் ஆர்டர் செய்வது போன்று மளிகைப் பொருட்களை தேர்ந்தெடுக்க வேண்டும். மளிகைப் பொருட் களின் அளவு விலை விவரங்கள் ஆகியவற்றை சரி பார்த்து பதிவு செய்ய வேண்டும். மளிகை பொருட்கள் வீடு தேடி வரும் பொதுப் பணம் கொடுத்தால் போதும். ஸ்மார்ட்போன் பயன்படுத்தத் தெரியாத பொது மக்களுக்கு உதவும் வகையில் ஒவ்வொரு தெருவிலும் தன்னார்வலர் கள் நியமிக்கப் பட்டுள்ளனர். அவர்கள் தங்களது செல்போனில் இருந்து ஆர்டர் செய்யும் பொது மக்களின் தேவைகளை கேட்டறிந்து பொருட்களை வாங்க உதவி செய்வார். அந்த கடையின் தொலைபேசி எண், , மற்றும் குறியீடு ஆகியவற்றை ஒரு சீட்டில் குறித்து கொடுக்க வேண்டும். கடையிலிருந்து டெலிவரி செய்யும் பொழுது இந்த சீட்டினை நுகர்வோர் பொருட்கள் கொண்டு வருபவரிடம் கொடுத்தால் அவர் பொருள்களை அந்த நபருக்கு வழங்குவார். ஸ்மார்ட்போன் பயன்படுத்த தெரிந்த பெ பாதுமக்கள் அனைவரும் நேரடியாக இந்த செல்போன் ஆப் பதிவிறக்கம் செய்து கொண்டு நேரடியாக ஆர்டர் செய்யலாம். https://in.deliverme.az என்ற இணையதள் மூலம் மளிகை பொருட்கள் வாங்கலாம். மேலும் காற்கறிகளை தள்ளு வண்டிகள் மூலம் விற்பனை செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. இதனை நேற்று கலெக்டர் திவ்யதர்ஷினி தொடங்கி வைத்தார்.