கே.வி.குப்பம் வட்டத்தில் லத்தேரி ஊராட்சியில் கிருமிநாசினி தெளிப்பு
வேலூர் மாவட்டம், கே. வி.குப்பம் வட்டத்தில், லத்தேரி ஊராட்சியில், ஊராட்சி செயலாளர் ஏ. சாமுவேல் தலைமையில் கொரோனா வைரஸ் தடுப்பு பணி தீவிரப் படுத்தப் பட்டுள்ளது. ஊராட்சி பணி யாளர்களுக்கு கையுறை, முக கவசம், தலை கவசம், மற்றும் கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது. ஊராட்சி பணியாளர்கள் வீடுகள் தோறும் பிளீச்சிங் பவுடர் போட்டும், கிருமி நாசினி தெளித்தும், சுகாதார பணிகளை மேற்கொண்டு வரு கின்றனர். மேலும் கொரோனா விழிப்புணர்ச்சி சுவரொட்டிகள் கிராமங்கள் தோறும் ஒட்டபட்டுள்ளது, வீடு, வீடாக சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டும், கிராம மக்களிடம் சோப்பு போட்டு நன்கு கை தேய்து கை கழுவும் முறைகளை குறித்தும் ஊராட்சி செய லாளர் ஏ.சாமுவேல் விளக்கி னார், 144 தடை உத்தரவு உள்ள தால் வீட்டை விட்டு யாரும் வெளியே வரக்கூடாது. காய்கறிகளை வாங்க செல் வோர், ரேஷன் கடைக்கு செல்வோர், கொரோனாவைரஸ்பரவலை தடுக்க சமூக இடை வெளி பின்பற்ற வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.