திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் கொரானா வைரஸ் தொற்று பரவல் காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாள் முதல் தூய்மைப் பணியாளர்கள் கொரோனா அச்சுறுத்தலையும் மீறி நகரத்தின் தூய்மைமையை பாதுகாத்து வருகின்றனர் ஆகவே வாணியம்பாடி நகராட்சி ஆணையர் சிசில் தாமஸ் , மேலாளர் ரவி சுகாதார அலுவலர் மற்றும் சுகாதார ஆய்வாளர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் வாணியம்பாடி நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு கபசுர சூப் மற்றும் நோய் எதிர்ப்பு மாத்திரைகளை மகா யோக தியான அறக்கட்டளை காஞ்சிபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு. செயல்பட்டு வருகின்ற நிலையில் தமிழகம் முழுவதும் இயங்கி வருகிறது அதன் வாணியம்பாடி ரிஷி சசி அவர்கள் ரிஷி வசீகரானந்தம் ஆகியோர் 22 மூலிகைகள் கொண்ட மகா கபசுர சூப் மற்றும் மூலிகை மாத்திரையை வழங்கினார்கள்