தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தொற்று நோய் பரிசோதனை ஆய்வகத்தினை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். அருகில், மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.பி. சண்முகநாதன் (ஸ்ரீவைகுண்டம்), சின்னப்பன் (விளாத்திகுளம்), மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பால கோபாலன், தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு. திருவாசகமணி மற்றும் அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், முக்கிய பிரமுகர்கள் உள்ளனர்.