அரியூர் அருகே உள்ளே மலைப்பகுதிகளில் சாராய கும்பலை பிடிக்க ஹெலிகேம் மூலம் போலீசார் சோதனை செய்தனர்.

ஊரடங்கையொட்டி டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதனால் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த மது பிரியர்கள் மது அருந்த முடியாமல் தவித்து வருகின்றனர். இதனை பயன்படுத்தி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சாராய வியாபாரம் அமோகமாக நடந்து வருகிறது. மதுபிரியர்களும் எங்காவது சாராயம் கிடைக்குமா? என விசாரித்து அங்கு சென்று சாராயம் குடித்து வருகின்றனர். குறிப்பாக வேலூரை அடுத்த அரியூர் அருகே புலிமேடு மலைப்பகுதியில் ஒரு கும்பல் சாராயம் காய்ச்சி விற்பனையில் ஈடுபட்டுள்ளனர். அதை தட்டிக் கேட்ட புலிமேடு பகுதி கிராம மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. அதில் 3 பேர் காயமடைந்தனர். இதையடுத்து 3 பேரை அரியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் (பொறுப்பு) கைது செய்தார். எனினும் அந்த மலைப்பகுதியில் சாராய விற்பனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் பல்வேறு இடங்களிலும் சாராய விற்பனை நடந்து வருகிறது. இதை தடுக்க முடியாமல் மாவட்ட காவல்துறை திணறி வருகிறது. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் உத்தரவின் பேரில் சிறப்பு தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்த தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஊரடங்கு தொடர்வதால் சாராய விற்பனையும் ஒருபுறம் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. சாராயம் காய்ச்சுபவர்கள் மலைகளில் பதுங்குவதால் அவர்களை பிடிப்பது போலீசாருக்கு சவாலாகவே உள்ளது. இந்த நிலையில் சாராய கும்பலை பிடிக்கும் வகையில் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையிலான போலீசார் புலிமேடு மலைப்பகுதியில் ஹெலிகேம் மூலம் சாராய கும்பலின் நடமாட்டத்தை கண்காணித்தனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், புலிமேடு, சிவநாதபுரம், குருமலை, மாட்டுப்பாறை போன்ற இடங்களில் ஹெலிகேம் மூலம் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் புலிமேடு மலைப்பகுதியில் சாராய கும்பலின் நடமாட்டம் இருப்பது தெரியவந்தது. சாராயம் காய்ச்சும் இடங்கள், விற்பனை இடங்களை கண்டறிந்துள்ளோம். விரைவில் சாராய கும்பலை சுற்றி வளைத்து கைது செய்வோம் என்றனர். 



  1.  


கருத்துகள்
Popular posts
தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
படம்
சமூக வலைத்தளங்களில் பல பெண்கள் குறி வைத்து வாழ்க்கையை சீரழித்த காமுகன் சென்னையில் கைது
படம்
பணியிடங்களில் நடக்கும் பாலியல் தொல்லைச் சம்பவங்களின் தாக்கம்...” ஐகோர்ட் நீதிபதி வேதனை!
படம்
அனைத்து தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி’’ - முதல்வர் ஸ்டாலின். தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை" என்று தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். தந்தையர் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை! தம் மக்கள் அவையத்து முந்தியிருக்க உழைக்கும் அனைத்துத் தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி நவில்வோம்!" என்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழக விளையாட்டுத்துறை மந்திரி உதயநிதி ஸ்டாலின் நடித்த கண்ணை நம்பாதே திரைப்பட வெளியீட்டு விழா கோலாகலம்!
படம்