தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க கொரோனா வைரஸ் நோய் தொற்று நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள மண்டல சிறப்பு கண்காணிப்பு குழு அலுவலர் மற்றும் ஆவண காப்பக ஆணையர் மங்கத்ராம் சர்மா அவர்களும் ரயில்வே காவல் துறை தலைவர் (I.G.) திருமதி. வே.வனிதா , வேலூர் | திருப்பத்தூர் ராணிப்பேட்டை மாவட்டங்களில் போர்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு | நடவடிக்கைகள் குறித்து மூன்று மாவட்ட ஆட்சித்தலைவர்கள் வேலூர் அ. சண்முகசுந்தரம். திருப்பத்தூர் ம.ப.சிவன் அருள். ராணிப்பேட்டை ச.திவ்யதர்ஷினி, மாவட்ட காவல் கண்காணிப்பளர்கள், மாவட்ட வருவாய் அலுவலர்கள் மற்றும் மருத்துவர்களுடன் ஆய்வு நடத்தினார்கள்.