இருட்டு கடை அல்வா கிடைக்கல மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
திருநெல்வேலி மாநகரில் இருட்டுக் கடை அல்வா மிகவும் ருசியாக தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. கோவிட் 19, கொரோனா சுய ஊரடங்கு, 144 தடை உத்தரவு நாடெங்கும் பிறப்பிக்கப்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் இருட்டுக் கடை அல்வா, திருநெல்வேலி அல்வா கடைகள் தொழிலாள்கள் வேலைக்கு வராத காரணத்தாலும், தொடர்ந்து மூடப்பட்டு வருவதால் பொதுமக்கள் அல்வா என வாயில் சொல்லி எச்சி ஊறி ஏமாந்து வருகிறார்கள். கோதுமை, மைதா, முந்திரிப்பருப்பு , நெய் , கலர் பவுடர்கள் மூலம் விதவிதமாகவும், கலர் கலராகவும் திருநெல்வேலி அல்வா தயாரிக்கப்பட்டு உலகப் பெயர் பெற்ற அல்லா என பெயர் பெற்றது ஆகும். குழந்தைகள், வெளிநாட்டினர்கள், முதியோர்கள், பெண்கள் என அனைவராலும் விரும்பி சாப்பிடும் அல்வா கடை திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.