தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனை புதிய சளி சேகரிப்பு மையம் அமைப்பு தென்காசி மாவட்ட ஆட்சியர் அரசு மருத்துவமனையில் ஆய்வு

                                 


தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் ஜெஸ்லின் பொதுமக்களின் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் நலனுக்காக இணை இயக்குநர் நலப்பணிகள் மருத்துவர் முருகவேல் ஆலோசனையின் படி புதிய வித்தியாசமான சளி மாதிரி சேகரிப்பு மையத்தை தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை யில் உருவாக்கியுள்ளார். கொரோனா தொற்று நோயாளிகளுக்கு உள்ளதா என கண்டறிய மூக்கிலும், தொண்டையிலும் சனி எடுப்பதற்காக புதிதாக உருவாக்கப்பட்ட அமைப்பை மாவட்ட ஆட்சியர் அருண் தயாளன் பார்வையிட்டார். இந்த புதிய சேகரிப்பு மையத்தில் சளி மாதிரி எடுக்கும் போது ஒரு கொரானா தொற்று நோயாளியிடம் இருந்து இன்னொரு நோயாளிக்கோ அல்லது நோயாளியிடம் இருந்து மருத்துவமனை பணியாளர்களுக்கோ பரவ வாய்ப்பில்லை என மருத்துவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் விளக்கினர். சளி சேகரிப்பு மையம் பற்றி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் ஜெஸ்லின் கூறியதாவது, கொரோனா தொற்றின் வீரியத்தையும் அது பரவும். வேகத்தையும் கருத்தில் கொண்டு, நோயாளிகளின் நலன் கருதியும், மருத்துவமனை பணியாளர்களின் நலன் கருதியும் மற்றவர்களுக்கு பரவாமல் இருப்பதற்காக புது முயற்சியாக இணை இயக்குநர் ஆலோசனை யின் படி அனைத்து மருத்துவர் களின் ஒத்துழைப் புடன் இந்தப் புதிய சளி சேகரிப்பு மையத்தை உருவாக்கியுள் ளோம். மையத்தில் ஒரு நோயாளிக்கு சளி மாதிரி எடுத்த டென் ஐந்து நிமிடத்தில் அந்த மையத்தை கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்த தானியங்கி அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள் ளது. எங்களின் எண்ணங் களையும் தேவைகளையும் கூற அதை அப்படியே ஏற்று உடனடியாக வடிவமைத்துக் கொடுத்த அரசு பொறியாளர்கள் இப்ராஹிம், உதயகுமார், ஒப்பந்த பணியாளர் ஆனந்த் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.


கருத்துகள்
Popular posts
தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
படம்
சமூக வலைத்தளங்களில் பல பெண்கள் குறி வைத்து வாழ்க்கையை சீரழித்த காமுகன் சென்னையில் கைது
படம்
பணியிடங்களில் நடக்கும் பாலியல் தொல்லைச் சம்பவங்களின் தாக்கம்...” ஐகோர்ட் நீதிபதி வேதனை!
படம்
அனைத்து தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி’’ - முதல்வர் ஸ்டாலின். தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை" என்று தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். தந்தையர் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை! தம் மக்கள் அவையத்து முந்தியிருக்க உழைக்கும் அனைத்துத் தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி நவில்வோம்!" என்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழக விளையாட்டுத்துறை மந்திரி உதயநிதி ஸ்டாலின் நடித்த கண்ணை நம்பாதே திரைப்பட வெளியீட்டு விழா கோலாகலம்!
படம்