வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொளிகாட்சி மூலம் தலைமை செயலாளர் கே.சண்முகம். மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் பீலாராஜேஷ் அவர்களும் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ள நாட்கள் வரை கொரோனாவைரஸ் தாக்கத்தால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைத்திடவும் அந்த பகுதிகளை தீவிரமாக கண்காணிக்கவும் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படாதவாறு காவல்துறை கண்காணிப்புகளை பலப்படுத்துவது குறித்தும் வேலூர் மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள மண்டல சிறப்பு கண்காணிப்புகுழு அலுவலர் மற்றும் ஆவணகாப்பக ஆணையர் மங்கத்ராம்சர்மா, மாவட்ட ஆட்சித்தலைவர் அ.சண்முக சுந்தரம். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார். மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பார்த்தீபன் மற்றும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மற்றும் மருத்துவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்கள்.