தேனியில் பழனிசெட்டிப்பட்டி பேரூராட்சியில் திலகம் நினைவு சேவை மையம் சார்பில் உதவி
தேனியில் பழனிசெட்டி பட்டி பேரூராட்சி திலகம் நினைவு சேவை மையம் சார்பில் 3 கிலோ அரிசி பை மற்றும் அனைத்து வகை யான மல்லிகை பொருள் துப்புரவு பணியாளர்களுக்கு வழங்கப்பட்டது. நாடு முழுவதும் கொரோனா நோய்த் தொற்று பரவும் காரணமாக 144 தடை உத்தரவு பாதிக் கப்பட்ட நிலையில் கூலித் தொழில் செல்லும் ஏழை மையம் எளிய மக்கள் வேலையின்றி உணவுப் பொருள்கள் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்துள்ளனர். திலகம் நினைவு சேவை மையம் ராஜசேகர் மற்றும் வினோத் கண்ணன் மற்றும் வைரமணி மற்றும் நம்பியார் மற்றும் முத்துக்குமார் 150 துப்புரவு பணியாளர் குடும்பங்களுக்கு தலா 3 கிலோ பை மற்றும் அனைத்து வகையான மளிகைப் பொருட்கள் மற்றும் தேவையான உணவுப் பொருட்கள் வழங்கிய பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் நன்றியும் பாராட்டும் தெரிவித்தனர். இதுபோன்ற நல் உள்ளம் கொண்டவர்கள் உணவு பொருட்கள் கிடைக்காமல் அவதிப்படும் கூலித் தொழிலாளர்களுக்கு உதவ முன்வர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.