சேலம் மாவட்டம், தாரமங்கலம் காவல் ஆய்வாளராக திரு.பொ.சரவணன்,உதவி ஆய்வாளராக திரு.செல்வம் அவர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.தற்போது அரசானது 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில்,தாரமங்கலம் எம்ஜிஆர் காலனியில் இரண்டு நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.இந்த நிலையில் தாரமங்கலத்தில் புதியதாக பொறுப்பற்றிருக்கும் காவல் ஆய்வாளர் திரு.பொ.சரவணன் தலைமையில் ஊர்காவல் படை,மற்றும் தன்னார்வலர்கள் தாரமங்கலம் காவல்துறையுடன் இணைந்து சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகிறார்கள்.இதனால் மக்கள் நடமாட்டத்தை குறைத்து அனைத்து பொருள்களும் வீடுதேடி கொண்டு சேர்க்கும் மகத்தான பணியை ஆய்வாளர் செய்துள்ளார்.வருவாய்துறையினரும்,காவல்துறையினருடன் இணைந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை சிறப்பாக செய்து வருகின்றனர். தாரமங்கலத்தில் உள்ள பொதுமக்கள் மத்தியில் காவல்ஆய்வாளர் திரு.பொ.சரவணன் அவர்களுக்கு நல்ல மரியாதை உள்ளதை காண முடிகிறது..
சேலம் நிருபர்.K.ராஜா