திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பொன்னேரி பகுதியில் வசிக்கும் கல்லூரி மாணவர்கள் சுற்றுலாத்தலமான ஏலகிரி மலையில் உள்ள குரங்குகளுக்கு உணவு சமைத்து வழங்கி வருகின்றனர் சமீபத்தில் ஊரடங்கு உத்தரவு காரணமாக சுற்றுலாத்தலமான ஏலகிரி மலைக்கு சுற்றுலா பயணிகள் வராத காரணத்தினால் ஏலகிரி மலை பகுதியில் உள்ள குரங்குகள் உணவின்றி தவித்து வந்தன இதை அறிந்த பொன்னேரி பகுதியில் வசிக்கும் கல்லூரி மாணவர்கள் ஊரடங்கு உத்தரவு அறிவித்த முதல் நாளிலிருந்து இன்று வரை உணவு சமைத்து ஏலகிரி மலைக்கு செல்லும் மலைப்பாதைகளில் உள்ள குரங்குகளுக்கு தண்ணீர் மற்றும் உணவு காய்கறிகளை கொடுத்து வருகின்றனர் குரங்குகளும் இவர்களிடம் அன்பாக பழகி வருகிறது
வனவிலங்குகளுக்கு உணவு அளிக்கும் கல்லூரி மாணவர்