உலகம் முழுக்க கொரோனா வைரஸ் தொற்று நோய் மிகவேகமாக பரவிவரும் நிலையில் சமூக சேவையில் தனி ஒரு மனிதனாக சென்னையில் உள்ள ஒரு ஐடி கம்பெனியில் பணிபுரியும் தினேஷ் சரவணன் என்ற தனிமனிதன் வேலூரில் வாழ்வாதாரம் மிக தங்கியுள்ள மக்களுக்காக பல சேவைகள் செய்து வருகிறார் சுமார் நான்கு வருடங்களாக இந்த சேவை செய்து வருவதாக கூறுகிறார் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக ஏழை பொதுமக்கள் மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் பயன் அடைந்துள்ளதாக மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றார் இதுபோன்று வேலூர் மாவட்டத்தில் முத்துமண்டபம் அருகில் சலவை தொழில் செய்துவரும் 130 குடும்பங்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று நோயால் வேலையின்றி வருமானம் இல்லாமல் தவிக்கும். 130 குடும்பங்களுக்கும் தனி ஒரு மனிதனாக சென்னை ஜடியில் பணிபுரியும் தினேஷ் சரவணன் என்பவர் , வேலூர் முத்து மண்டபம் பகுதிகளில் வசிக்கும் சலவை தொழில் செய்யும் 130, குடும்பத்தாருக்கு முத்துமண்டபம் பகுதியில் வீடு வீடாகச் சென்று மளிகைப் பொருட்கள் இலவசமாக வழங்கி அவர்களிடம் ஆசி பெற்றார் இது போன்று சமூக சேவை அனைவரும் செய்ய வேண்டும் அந்த மனபான்மை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இதுபோன்று நான் செய்து வருகின்றது என்று கூறினார் இதனால் 500-க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்