குப்பைகளை வண்டியில் தூய்மை பணியாளர்களை ஏற்றி செல்லும் அவலம்
குப்பைகளை ஏற்றிச்செல்லும் வாகனத்தில் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடும் தற்காலிக தூய்மை பணியாளர்களை நகராட்சி நிர்வாகத்தினரே ஏற்றிச்செல்லும் அவலம். ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகரம் முழுவதும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட தற்காலிக தூய்மை பணியாளர்கள் 20க்கும் மேற்பட்டோரை நகராட்சி நிர்வாகத்தினர் குப்பைகளை அள்ளிச்செல்லும் ஒரே லோடு ஆட்டோவில் ஏற்றி சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆற்காடு நகரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆக உள்ள நிலையில், சுமார் 65 தூய்மை பணியாளர்கள் நகரம் முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். நகராட்சி சார்பில் தூய்மை பணிகளை மேற்கொள்ள ஆட்கள் அதிகம் தேவைப்படு வதால் கலவை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிருந்து தூய்மை பணியாளர்களை அழைத்து வரும் போது எவ்வித போக்குவரத்து வசதியும் அவர்களுக்கு ஏற்படுத்தி தராமல் குப்பைகளை ஏற்றி செல்லும் லோடு ஆட்டோவில் நகராட்சி நிர்வாகத்தினர் அழைத்து வருகின்றனர். சமூக ! இடைவெளியை கடைபிடிக்க பொது மக்களை வலியுறுத்தும் நகராட்சி நிர்வாகத்தினரே கொரோனா தடுப்பு பணியில் உயிரையும் பொருட்படுத்தாது ஈடுபடும் தூய்மை பணியாளர்களை இவ்வாறு பொறுப்பற்ற முறையில் குப்பை வண்டியில் ஏற்றி செல்லும் அவல நிலை சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.