தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் அமைந்துள்ள லால் பகதூர் சாஸ்திரி உள்விளையாட்டு அரங்கத்தில் சமீபத்தில் நடைபெற்ற மாணவியருக்கான டைக்-குவாண்-டோ (Tae Kwon Do) போட்டியில் (இது தற்காப்புக் கலையின் ஒரு பிரிவாகும்) துணை ஜூனியருக்கான இறுதிச்சுற்றில் வேலம்மாள் வித்யாலயா (மேல் அயனம்பாக்கம்) பள்ளியின் 8ஆம் வகுப்பு மாணவி எம்.சாய் மோனிஷா, தெலுங்கானாவைச் சேர்ந்த மாணவியை எதிர்த்துப் போட்டியிட்டு 10-1 என்ற புள்ளி வித்தியாசத்தில் வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
டைக்குவாண்டோ மார்டியல் ஆர்ட்ஸில் உள்கட்டமைப்பு மற்றும் நிபுணத்துவத்தை உருவாக்குவதற்கான உரிமையை அடிப்படையாகக்கொண்ட உலக இன்பினியோ டேக்வாண்டோ இப்போட்டியை ஏற்பாடு செய்திருந்தது. இதில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவியர் பங்கேற்றனர். உயிர்காக்கும் தற்காப்புக் கலையில் சிறந்து விளங்கும் மாணவியைப் பள்ளி நிர்வாகம் பாராட்டி வாழ்த்துகிறது.