கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகர பொதுமக்கள் சாலைகளில் தேவையின்றி நடமாட தடை விதிக்கப் பட்டுள்ளது. இருசக்கர வாகனங்களில் ஒருவர் மட்டுமே செல்ல வேண்டும். பொது இடங்களில் கூட்டமாக கூடாமல் சமூக இடைவெளியை கடை பிடிக்க வேண்டும் என்று அதிகாரிகள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார்கள். இந்த நிலையில், நகரில் கடந்த சில நாட்களாக காலை நேரத்தில் சாலை களில் இரு சக்கர பொதுமக்கள் நடமாட்டம் வாகனங்களில் பொது மக்கள் அதிக அளவில் சென்று வருகிறார்கள். போலீசாரின் எச்சரிக்கை யையும் மீறி பொது இடங்களில் மக்களின் இயல்பான நடமாட்டம் வழக்கத்தை விட அதிகரித்து உள்ளது. நகர் பகுதியில் உள்ள பிரதான சாலைகளில் காலை நேரத்தில் வழக்கம் போல் கூடும் பொதுமக்கள் எந்த வித சமூக இடை வெளியையும் கடை பிடிக்காமல் காய்கறிகள் வாங்குதல், மளிகை நடமாட்டம் அதிகரிப்பு கடைகளில் பொருட்களை வாங்குதல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஓசூர் மாநகர பல்வேறு பகுதிகளில் உள்ள பல இடங்களில் தேவை இல்லாமல் கடைகள் திறந்து இருந்தது. இ த னால் பொதுமக்களின் நடமாட்டம் அதிகரித்து இருப்பது ஊரடங்கு அமலில் உள்ளதா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.