ஒருங்கிணைந்து செயல்பட ஐ.நா., சபையில் தீர்மானம் நிறைவேற்றம்.

ஒருங்கிணைந்து செயல்பட ஐ.நா., சபையில் தீர்மானம் நிறைவேற்றம்.


நியூயார்க் : 'கொரோனா வைரசை தோற்கடிக்க சர்வதேச நாடுகள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்' என ஐக்கிய நாடுகள் சபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


உலகம் முழுதும் பெரும் உயிரிழப்புகளையும் பொருளாதார பாதிப்புகளையும் கொரோனா வைரஸ் ஏற்படுத்தி வருகிறது. இதை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆலோசிப்பதற்காக ஐ.நா. பொதுச் சபைகூட்டம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. அப்போது இந்தியா உட்பட 188 நாடுகள் இணைந்து 'கொரோனா வைரசை ஒழிக்க சர்வதேச நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம்' என்ற தலைப்பிலான தீர்மானத்தைதாக்கல் செய்தன.இந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.


தீர்மானத்தில் கூறப்பட்டு உள்ளதாவது:கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.மனித குலத்துக்கு மிகப் பெரிய சவாலாகவும் பாதுகாப்புக்கு ஆபத்தாகவும் விளங்கும் இந்த வைரஸ் அனைவருக்கும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.இதற்கு முன் இந்த உலகம் சந்தித்திராத வகையில் சமூகத்திலும் பொருளாதாரத்திலும் பெரும் பாதிப்பை இந்த வைரஸ் ஏற்படுத்தி வருகிறது. கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் சீர்குலைந்துள்ளது.எனவே கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் சர்வதேசநாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்; இந்த செயல்பாடு மிகவும்தீவிரமாக இருக்கவேண்டும்.


தகவல்கள் மருத்துவவசதிகளை பகிர்ந்து கொள்வது உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள வழிகாட்டும் குறிப்புகளை பின்பற்றுவது போன்றவற்றில் ஒருங்கிணைந்த செயல்பாடு அவசியம்.இந்த நெருக்கடியான நேரத்தில் மனித உரிமைகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டும். இன ரீதியாகபாகுபாடு காட்டும்நடவடிக்கை கூடாது.இவ்வாறு அந்ததீர்மானத்தில் கூறப்பட்டு உள்ளது.
இந்தியாவுக்கு ரூ.7,600 கோடி உலக வங்கி தாராளம்


கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக உலக வங்கி சார்பில் இந்தியாவுக்கு 7,600 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. கொரோனா அறிகுறி உள்ளவர்களை கண்டறிதல் பரிசோதனை செய்தல் நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிதல் ஆய்வகம் அமைத்தல் மருத்துவ கருவிகள் வாங்குதல் சிறப்பு வார்டுகள் அமைத்தல் ஆகியவற்றுக்காக இந்த நிதியை மத்திய அரசு பயன்படுத்த உள்ளது.இதுதவிர பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட ஏழை நாடுகளுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஒட்டுமொத்தமாக 6,840 கோடி ரூபாயை உலக வங்கி வழங்கியுள்ளது.


கருத்துகள்
Popular posts
தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
படம்
சமூக வலைத்தளங்களில் பல பெண்கள் குறி வைத்து வாழ்க்கையை சீரழித்த காமுகன் சென்னையில் கைது
படம்
பணியிடங்களில் நடக்கும் பாலியல் தொல்லைச் சம்பவங்களின் தாக்கம்...” ஐகோர்ட் நீதிபதி வேதனை!
படம்
அனைத்து தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி’’ - முதல்வர் ஸ்டாலின். தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை" என்று தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். தந்தையர் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை! தம் மக்கள் அவையத்து முந்தியிருக்க உழைக்கும் அனைத்துத் தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி நவில்வோம்!" என்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழக விளையாட்டுத்துறை மந்திரி உதயநிதி ஸ்டாலின் நடித்த கண்ணை நம்பாதே திரைப்பட வெளியீட்டு விழா கோலாகலம்!
படம்