திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் தமிழக முதல்வர் ஆணைக்கிணங்க வாணியம்பாடி சந்தை மைதானத்தில் உள்ள அம்மா உணவகத்தில் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வரும் 3 தேதி வரை இலவச உணவு வழங்க அதிமுக சார்பில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நீலோபர் கபில் நிதி உதவி அளித்து இலவச உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணியம், நகராட்சி ஆணையாளர் சிசில் தாமஸ்,வட்டாட்சியர் சிவப்பிரகாசம் உள்ளிட்டோர் பலர் உடனிருந்தனர்.