சர்வதேச மனித உரிமைகள் மற்றும் சமூக நீதி சபை சார்பாக தூய்மை, பணியாளர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது சர்வதேச மனித உரிமைகள் மற்றும் சமூக நீதி சபையின் தேசிய தலைவர்
இரா .செல்வகணேசன் அவர்களின் ஆணைப்படி, தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி நகரில் கொரோனா வைரஸ் தொற்று நோய் காரணமாக ஊரடங்கு உத்தரவினால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு உதவும் வகையில் தமிழ்நாடு மாநில துணைத்தலைவர்
ஆர் .பாஸ்கரன் அவர்களின் தலைமையில் மதிய உணவு மற்றும் குடிநீர் சாலையோரம் உணவின்றி தவிப்பவர்கள் மற்றும் பிற மாநில கனரக வாகன ஓட்டுநர்கள் காவல் துறை சார்ந்தவர்கள் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் சுமார் 50 பேருக்கு உணவு அளிக்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் நமது அமைப்பின் உறுப்பினர்கள் எஸ்ஜி.கண்ணன், எஸ் .முத்துராமலிங்கம், ஆர்.செல்வராஜ், எஸ் .ஜெயகாந்தி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர் மேலும் எங்கள் அமைப்பின் மூலம் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை ஏழை மக்களுக்கு உதவும் வகையில் செய்து வருகிறோம்