திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி, உலகம் தழுவிய கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது இதுகுறித்து காவல்துறையினர் பொதுப்பணித்துறையினர் நகராட்சி அலுவலர்கள் கடந்த ஒரு மாத காலமாக பல விழிப்புணர்வு பொதுமக்களிடையே ஏற்படுத்தி வருகின்றனர் இருந்தும் பொதுமக்களுக்கு இந்த வைரஸ் குறித்த எந்த அச்சமும் இன்றி ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது என்பதை மறந்து சகஜமான வாழ்க்கை சூழ்நிலையிலேயே இருந்து வருகின்றனர் மேலும் சமூக விலகல் ,மற்றும் முக கவசம் அணியாமல் பகல் நேரங்களில் தகுந்த காரணமின்றி வெளியில் சுற்றித் திரிவது போன்றவற்றை செய்துவருகின்றனர் மேலும் சமீபத்தில் வாணியம்பாடி திருப்பத்தூர் ஆம்பூர் போன்ற பகுதிகளில் கொரோனா தொற்றுஅதிகம் உள்ளதாக பரவலாக பேசப்படுகிறது ஆகவே இதுகுறித்து ஆலோசனை நடத்திய மாவட்ட ஆட்சியர் திரு சிவனருள் அனைத்து இறைச்சிக் கடைகள் மீன் கடைகள். ஆகியவை மறு உத்தரவு வரும்வரை திறக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளார் மருந்தகங்கள் மதியம் இரண்டு மணி வரையே திறந்திருக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார் மேலும் நகராட்சி ஆணையர் சிசில் தாமஸ் வாணியம்பாடியில் 36வார்டுகளில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் கிருமிநாசினி நீரை வாகனங்கள் மூலம் எடுத்து சென்று தெளிக்கும் படி உத்தரவிட்டார் மேலும் வாணியம்பாடி நகரம் முழுவதும் உள்ள ஒவ்வொரு தெருவையும் தனிமைப் படுத்தப் பட்டது அதிகாரிகள் மற்றும் அரசு அலுவலர்கள் எடுக்கும் இந்த நடவடிக்கைக்கு மக்கள் மதிப்பளித்து தங்கள் வீட்டிலேயே சமூக விலகல் கடைப்பிடிக்க வேண்டும் மேலும் இந்த கொடிய கொரோனா வைரஸ் இடமிருந்து தங்களை தாங்களே காத்துக் கொள்ள வேண்டும்