விவசாயிகளுக்கு மேலும் சலுகை சேமிப்பு கிடங்குகளில் கட்டணம் ரத்து

விவசாயிகளுக்கு மேலும் சலுகை விவசாயிகளுக்கு மேலும் சலுகைகள் அறிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி


 


விவசாயிகளுக்கு தமிழகத்தில் கொரோனா தாக்குதலைக் கட்டுப்படுத்திட அரசு பல் வேறு நடவடிக் கைகளை மேற்கொண்டு வருகின்றது. விளை பொருட்களை விற்பனைக்கு எடுத்துச் செல்வதில் உள்ள பிரச்சனைகளை களைந்திட உரிய ந ட வ டிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கிடங்கு வசதி ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் பயன்பாட்டிற்காக நவீன சேமிப்புக் கிடங்குகள் அமைக்கப்பட்டு , அவைகிடங்குகளில் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. விவசாயிகள் விளைபொருட்களை இக்கிடங்குகளில் 180 நாட்கள் வரை வைத்து பாதுகாத்திடலாம். அதிக விலை கிடைக்கப்பெறும் காலங்களில் விளை பொருட்களை கிடங்கி லிருந்து எடுத்து விற்பனை செய்திட, கிடங்கு வாடகைக் கட்டணத்தை முதல் 30 நாட்களுக்கு செலுத்திட தேவையில்லை என அம்மாவின் அரசு ஏற்கனவே ஆணையிட்டி ருந்தது. அது மேலும் ஒரு மாத காலம் நீட்டிக்கப்படுகிறது. பொருளீட்டுக்கடன் வசதி அவைகிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ள விளை பொருட்களை அட மானத்தில் பேரில் அதிக பட்சம் 50 சதவீத சந்தை மதிப்பு அல்லது 3 இலட்சம் ரூபாய் இவற்றில் எது குறைவோ அந்த அளவிற்கு பொருளீட்டுக் கடனைப் பெற்றிடலாம். கடனிற்கான கால அளவு 180 நாட்கள் ஆகும். இதற்கான வட்டி 5 சதவீத மாகும். கடனிற்கான வட்டி முதல் 30 நாட்களுக்கு செலுத்திட தேவையில்லை என ஆணையிடப் பட்டிருந்தது. அது மேலும் ஒரு மாத காலம் நீட்டிக்கப் படுகிறது. காய்கறிகள் மற்றும் பழங்களை குளிர்பதனக் கிடங்குகளில் பாதுகாத்திட கட்டணம் முழுவதும் ரத்து பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி காய் கறிகள் மற்றும் பழங்கள் கிடைத்திடவும், அவற்றை பாதுகாத்து, தேவைப் படும் காலங்களில் விற்பனை செய்வதற்கு ஏதுவாகவும், விவசாயிகளின் பயன் பாட்டிற்காக குளிர்பதனக் கிடங்குகள் இயங்கி வருகின்றன. இக்கிடங்கு களில் காய்கறிகள் மற்றும் பழங்களை சேமித்து வைக்க விவசாயிகளிட மிருந்து பயன்பாட்டுக் கட்டணத் தொகை வசூ லிக்கப்பட்டு வருகின்றது. தற்போதுள்ள சூழ்நிலையினை கருத்தில் கொண்டும், மேலும் 15 நாட்களில் மாம்பழம் உற்பத்தி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படு வதாலும், விவசாயிகளிடமிருந்து வசூலிக்கப்படும். இப்பயன் பாட்டு கட்டணத் தொகை 30.4.2020 வரை வசூலிக்கப்படமாட்டாது என்றும், இக்கட்டணத்தை முழுவதையும் தமிழ்நாடு அரசே ஏற்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த பழனிசாமி சலுகை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீட்டிக்கப்படுகிறது. சந்தைக் கட்டண விலக்கு தற்போது நெல், சிறு தானியங்கள், பயறு வகைகள், நிலக்கடலை, எள், தேங்காய், பருத்தி, வெங்காயம், மிளகாய், புளி, முந்திரி, வெல்லம், மரவள்ளி மற்றும் சில மாவட்டங்களில் பழங்கள் மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட விளை பொருட்களை விவசாயிகள் விற்பனை செய்யும்போது, வியாபாரிகளிட மிருந்து விற்பனை மதிப்பில் 1 சதவீதம் சந்தைக் கட்டணமாக வசூலிக்கப் படுகின்றது. தற்போது நிலவி வரும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, விவசாயி களிட மிருந்து கொள்முதல் செய்யப்படும் விளை பொருட்களை நியாயமான விலையில், பொது மக்களுக்கு விநியோகம் செய்திட ஏதுவாக, தற்போது வியாபாரிகள் செலுத்தும் 1 சதவீத சந்தைக் கட்டணத்தை 30.4.2020 வரை ரத்து செய்யப்பட்டு இருந்தது. இந்த சலுகை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீட்டிக்கப் படுகிறது.


கருத்துகள்
Popular posts
தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
படம்
சமூக வலைத்தளங்களில் பல பெண்கள் குறி வைத்து வாழ்க்கையை சீரழித்த காமுகன் சென்னையில் கைது
படம்
பணியிடங்களில் நடக்கும் பாலியல் தொல்லைச் சம்பவங்களின் தாக்கம்...” ஐகோர்ட் நீதிபதி வேதனை!
படம்
அனைத்து தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி’’ - முதல்வர் ஸ்டாலின். தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை" என்று தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். தந்தையர் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை! தம் மக்கள் அவையத்து முந்தியிருக்க உழைக்கும் அனைத்துத் தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி நவில்வோம்!" என்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழக விளையாட்டுத்துறை மந்திரி உதயநிதி ஸ்டாலின் நடித்த கண்ணை நம்பாதே திரைப்பட வெளியீட்டு விழா கோலாகலம்!
படம்